• அரசியல்
    அரசியல்Show More
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Mediterranean Sea
    அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
    2026-04-02
    NASA Artemis II mission
    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
    2026-04-02
    Iran drone attack
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    online-global-tamil-news
    உலகம்
    K-POP BTS குழுவின் பிரம்மாண்ட ComeBack 2026!
    2026-03-23
    Petrol price hike Pakistan ,
    உலகம்
    போர் எதிரொலி: பாகிஸ்தானில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 321 ஆக உயர்வு!
    2026-03-07
    Nepal prime minister candidate Balen Shah
    உலகம்
    ராப் பாடகர் டூ பிரதமர்: நேபாள அரசியலை அதிரவைக்கும் பாலென் ஷா!
    2026-03-06
    India global GDP growth 2026-Online Tamil News
    உலகம்
    உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனா முன்னிலை – எலான் மஸ்க் !
    2026-02-02
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: தலையங்கம் : இசையைப் போற்றிய தமிழ்நாடு
Share
29°C
Chennai
few clouds
29° _ 28°
77%
3 km/h
Thu
29 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம் : இசையைப் போற்றிய தமிழ்நாடு

Last updated: 2026-01-08 11:22 am
T.R.Kathiravan 59 Views
Share
ilayaraja
SHARE

’’இசை உலக சரித்திரத்திலேயே ஒரு இசையமைப்பாளருக்கு அரசு பாராட்டு விழா நடத்தியது தமிழ்நாடு அரசுதான். அதுவும் இந்த விழாதான்’’ என்று தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 13.09.2025  அன்று நடந்த சிம்பொனி சிகரம் தொட்ட இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு -50 பாராட்டு விழா பற்றி அந்த விழாவிலேயே பெருமிதத்துடன் குறிப்பிட்டார்  இளையராஜா. 

இளையராஜாவுக்கு இந்த விழாவினை ஏன் தமிழ்நாடு அரசு முன்னெடுத்தது என்பது குறித்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே, ‘’நம்முடைய இசைஞானி அவர்கள், கலைத்தாய்க்கு மட்டும் சொந்தமானவர் இல்லை; தமிழ்த்தாய்க்கும் சொந்தமானவர். அதனால்தான் தமிழ்நாடு அரசு சார்பில் இந்தப் பாரட்டு விழாவை, அவரைக் கொண்டாடும் விழாவாக நடத்திக் கொண்டிருக்கிறோம்’’ என்று குறிப்பிட்டார். ’’சிம்பொனியின் சிகரம் தொட்டு உலக சாதனை படைத்த தமிழனை பாராட்டுவது தமிழ்நாடு அரசின் கடமை என்று கருதியிருக்கிறார் முதலமைச்சர்.  அதனால்தான் இந்த விழாவை நடத்தி இருக்கிறார்’’ என்று விழா குறித்து தனி வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார் இளையராஜா.

raja stalin

ஒரு பாராட்டு விழாவை இவ்வளவு சிறப்பாக ஒரு முதலமைச்சர் முனைப்பெடுத்து , அரசு சார்ந்த எல்லா அமைச்சர்களும், அதிகாரிகளும்  அதிக ஈடுபாட்டுடன்  நடத்தியதில், தமிழ்நாடு அரசு சார்பில், தன்னையும் இசையையும்  போற்றிய முதலமைச்சரின் செயலை நினைத்து அதீத மகிழ்ச்சியின் காரணமாக விழாவில் பேசிய இசைஞானிக்கு சிறிது நேரம் பேச்சு வரவில்லை; இலேசாக கண் கலங்கினார்.

சிம்பொனி இசையமைக்க இளையராஜா வெளிநாடு புறப்படுவதற்கு முதல்நாளே அவரை நேரில் சந்தித்து வாழ்த்திய முதல்வர், சிம்பொனி இசையமைத்துவிட்டு சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் அவருக்கு அரசு சார்பில்  மரியாதை அளித்தார்.  அடுத்து அரசு சார்பில் பிரம்மாண்ட பாராட்டு விழாவும் எடுத்ததில் நெகிழ்ந்து போயிருந்தார் இளையராஜா.

‘’முத்தமிழறிஞர் கலைஞர் என் மேல் வைத்த அதே அன்பை அவரது தவப்புதல்வன் மு.க.ஸ்டாலினும் வைத்திருக்கிறார்.  அதற்கு இசைதான் காரணம் என்று நினைக்கிறேன்’’ என்று அந்த நெகிழ்ச்சியை விழாவில் வெளிப்படுத்தினார்.

‘இசைதான் காரணம்’ என்று இளையராஜா குறிப்பிட்டதை மெய்ப்பிக்கும் விதமாகவே விழாவில் முதலமைச்சரின் பேச்சும் அமைந்திருந்தது.  ’’அரை நூற்றாண்டு காலத்தில் ராஜாவின் பாடலை முணுமுணுக்காத உதடுகளே தமிழ்நாட்டில் இருக்க முடியாது. ராஜாவின் பாடல்களை மனதில் ஏற்றி, தங்களின் இன்ப துன்பங்களைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளாத மனிதர்களே இருக்க முடியாது.  இளையராவின் இசை, தாயாக தாலாட்டுகிறது. காதலின் உணர்வுகளைப் போற்றுகிறது.  வெற்றிப் பயணத்திற்கு ஊக்கமளிக்கிறது. வலிகளை ஆற்றுகிறது. இவர் இளையராஜா மட்டுமல்ல; இணையற்ற ராஜா’’ என்று போற்றினார் முதலமைச்சர்.

rajini kamal stalin ilaiyaraja

கலைஞர் என் மேல் வைத்த அதே அன்பை.. என்று இளையராஜா குறிப்பிட ஒரு முக்கியக் காரணம்,’இசைஞானி’ பட்டம்.  காரைக்குடியில் நடந்த பாராட்டு விழாவிற்கு தலைமையேற்று கலைஞர் அன்று கொடுத்த அந்த பட்டம்தான் இளையராஜா என்றால் இசைஞானி என்று தமிழ்த்திரையுலக வரலாற்றில் நிலைத்திருக்கிறது.  இளையராஜாவுக்கு திட்டமிட்டு அந்த பட்டத்தை வழங்கவில்லை கலைஞர்.  ’’இளையராஜா மீதிருந்த பாசமும்,  அவர் இசை மீதிருந்த ஈர்ப்பும்தான் அந்த பட்டத்தை வழங்கக் காரணம்’’என்று கலைஞர் முன்பு சொன்னதை விழாவில் குறிப்பிட்டார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

கலைஞரைப் போலவே முதலமைச்சரும், அவரைத் தொடர்ந்து அவரது புதல்வர் உதயநிதி ஸ்டாலினும் இசையைப் போற்றினார்.  ’’இசையும் இளையராஜாவும் நம்முடன் எப்போது இணைபிரியாமல் இருப்பவர்கள்.  நம்மை தாலாட்டிக் கொண்டிருக்கும் இசைத்தாய்தான் இளையராஜா’’ என்று சொன்ன துணை முதல்வர், ‘’சென்னை டு விழுப்புரம் தூரம் எவ்வளவு என்றால் 25 இளையராஜாவின் பாடல்கள் தூரம் என்று ரசிகர்கள் சொல்லிவிடுவார்கள்’’ என்று சொன்னது இளையராஜா ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. அதனால்தான் அரங்கம் அதிர்ந்தது.

raja50

பொதுவாக முதலமைச்சரிடத்தில்தான் கோரிக்கை வைப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்களின் சார்பில், தமிழர்களின் சார்பில் முதலமைச்சரே இளையாராஜாவுக்கு கோரிக்கை வைத்து  விழாவில் வியப்பை ஏற்படுத்தினார்.  ‘’இளையராஜா மட்டும் இசையமைத்திருந்தால் திருக்குறளும், நற்றிணையும், புறநானூறும், குறுந்தொகையும், ஐங்குறுநூறும், பதிற்றுப்பத்தும், பரிபாடலும், சிலப்பதிகாரமும் எங்களுக்கு மனப்பாடம் ஆகியிருக்கும் என்று சோசியல் மீடியால் ஒருவர் எழுதியிருக்கிறார்.  தமிழ் ஆர்வலராக நான் இதையே கோரிக்கையாக வைக்கிறேன். சங்கத்தமிழுக்கு, தமிழ் இலக்கியங்களுக்கு இசையமைத்து ஆல்பங்களை வெளியிட வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார்.  முதலமைச்சரே தனக்கு இந்த கோரிக்கை வைத்ததை பெருமிதத்துடன் ஏற்றுக்கொண்டிருக்கும் இளையராஜா, ’’அந்த வேண்டுகோளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்’’ என்று பாராட்டு விழா குறித்து வெளியிட்டிருக்கும் தனி வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இளையராஜாவுக்கு நடந்த இந்த பாராட்டு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்று திரையுலகமே திரண்டு வந்திருந்து வாழ்த்தியது. 87 இசைக்கலைஞர்களை வைத்து சிம்பொனியும் இசைக்கப்பட்டது.  அதனால்தான், இப்படிப்பட்ட சிறப்பான விழாவில் ஒரு அறிவிப்பு வெளியிடாமல் இருக்க முடியுமா? என்று கேட்டு, ‘’இசைத்துறையில் ஆர்வத்துடன் சிறந்த இசையைப் படைக்கின்ற இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கின்ற விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் ‘இசைஞானி இளையராஜா’ பெயரில் விருது வழங்கப்படும்’’ என்று அறிவித்தார் முதலமைச்சர். அறிவிப்போடு நின்றுவிடாமல், ‘’இசைமேதை இளையராஜாவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்’’ என்ற கோரிக்கையினையும் வைத்து, ‘’இது நிச்சயம் நிறைவேறும்’’ என நம்பிக்கையும் தெரிவித்தார்.

இசைஞானியின் ரசிகர்களும் இதே நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

TAGGED:ilayarajamk stalintamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article INDUSTRIALGROWTH Tamil Nadu Increases Industrial Growth
Next Article waqf தலையங்கம் : வக்ஃப் சட்டமும் நீதியும்

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Mediterranean Sea
அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
Apr 2, 2026 at 6:59 pm
Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
Apr 2, 2026 at 6:44 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?