கரூர் சம்பவத்திற்கு பின்னர் எதுவும் பேசாமல் விஜய் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடந்த நேரத்தில், சினிமா நிகழ்ச்சி ஒன்றியில் பேசிய விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ‘’அவன் என்னுடைய ரத்தம். எழுந்து வருவான். எதையும் சமாளித்துதான் அரசியலில் சாதிக்க வேண்டும்’’ என்று தைரியமூட்டினார்.
அதே போன்று இப்போது ஜனநாயகன் விவகாரத்தில் பேசுங்க விஜய்.. பேசுங்க விஜய்… என்று ஊரே பேசிக்கொண்டிருக்கும் நேரத்திலும் மவுனமாக இருக்கும் விஜய்க்கு மீண்டும் தைரியமூட்டி இருக்கிறார் சந்திரசேகர்.

திருவாரூரில் காங்., பிரமுகர் செந்தில்பாண்டியன் இல்ல திருமணத்தில் பங்கேற்று பேசிய சந்திரசேகர், ‘’ஜனநாயகன் ஏன் ரிலீஸ் ஆகவில்லை? என்பது எல்லோருக்கும் தெரியும். அரசியலுக்கு புதியவர் வந்தால் இடையூறு ஏற்படுவது வழக்கம். இதில் ஆச்சரிப்படுவதற்கு ஒன்றுமில்லை. அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்றால் இதைப்பற்றியும் பேச வேண்டும். மாற்றத்தை உருவாக்க நினைப்பவர்கள் இது போன்ற தடைகளை எதிர்கொள்ள வேண்டும்.
விஜய் என் ரத்தம். அவர் இதுமாதிரி எவ்வளவோ தடைகளை எதிர்கொள்வார். எனக்கு எந்த பயமும் கிடையாது. என்னுடைய ரத்தம் விஜய்க்கும் எந்த பயமும் கிடையாது’’என்று சொல்லி விஜய்க்கு தைரியமூட்டி இருக்கிறார்.



