தவெகவில் யாரும் கூட்டணிக்கு போகாததால் அநேகமாக அக்கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் போலிருக்கிறது. இதற்காக வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக இருக்கிறது தவெக தலைமை.
சீட் கேட்டு வரும் கட்சியினரிடம் தவெக தலைமையின் பெயரில் ரூ.2 கோடி டி.டி. எடுத்துத் தரச் சொல்லி கேட்கிறாராம் பொ.செ.
இது எதற்காக? என்று கேட்டால், election 2026ல்ஒரு தொகுதியில் போட்டியிட பல கோடிகள் செலவிட வேண்டியது வரும். சீட் கேட்பவருக்கு அத்தனை கோடிகள் செலவு செய்யும் தகுதி உள்ளதா என்பதை அறிய வேண்டியது அவசியமாகிறது. அதனால்தான் கட்சிக்கு 2 கோடி ரூபாய் கேட்கிறோம். கட்சிக்கு 2 கோடி ரூபாய் நிதி கொடுக்கும் தகுதி இருப்போருக்கு சீட் கொடுத்தால் தேர்தலில் செலவு செய்யும் தகுதி அவருக்கு இருக்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும் என்கிறாராம் பொ.செ.

கீழ் மட்டத்தில் இருக்கும் யாராவது இப்படி கேட்டால் சந்தேகம் வந்து மேல்மட்டத்தில் புகார் செய்யலாம். மேல்மட்டத்தில் இருக்கும் பொ.செ.வே இப்படி ஆழம் பார்த்தால் என்ன செய்வது? என்று கையைப் பிசைந்து நிற்கிறார்களாம் நிர்வாகிகள்.



