மக்களவையில் தொடர்ந்து எதிர்க்கட்சிகளுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்து வருகிறார் சபாநாயகர் ஓம்.பிர்லா. இதனால் காங்கிரஸ் பெண் எம்.பிக்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர். பிரதமரை தாக்க வந்தார்கள் என்று அவர்கள் மீது ஓம் பிர்லா குற்றம்சாட்டியதால் அவர்கள் தாங்கள் மிகுந்த மன வேதனை அடைந்ததாக குறிப்பிட்டு பிர்லாவுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

ராகுல்காந்தியை பேச விடாமல் தடுப்பதாலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பிர்லாவுக்கு குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் சபாநாயகரின் கண்களுக்கு நாடாளுமன்ற மரபும், ஜனநாயகமும் தான் தெரிய வேண்டும்.

ஆனால் சபாநாயகர் ஓம் பிர்லாவின் ஒரு கண்ணுக்கு நரேந்திர மோடியும், இன்னொரு கண்ணுக்கு ஜெகதீப் தன்கரும் தான் தெரிகிறார்கள். எனவே அவையின் ஜனநாயகத்தை காக்க அவைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கட்சிகள் தாக்கல் செய்துள்ளன என்கிறார் சு.வெங்கடேசன் எம்.பி.



