• அரசியல்
    அரசியல்Show More
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    NASA Artemis II mission
    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
    2026-04-02
    Iran drone attack
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    2026-04-02
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    US-government -sell weapons- $11.15 billion-Taiwan-China
    உலகம்
    தைவானுக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா;  கிழக்கு ஆசியப் பகுதியில் போர் பதற்றம்?
    2025-12-19
    Elon Musk, SpaceX, satellites, orbital network, Starlink, AI, Online Tamil News
    உலகம்
    விண்வெளியில் 10 லட்சம் செயற்கைகோள்களை நிலை நிறுத்தும் எலான் மஸ்க் !
    2026-02-02
    online-tamil-news
    உலகம்
    உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
    2026-03-28
    Kim Jong Un missile test
    உலகம்
    எதிரிகளுக்கு எச்சரிக்கை: ஏவுகணை சோதனையை நடத்திய கிம் ஜாங் உன்!
    2026-03-11
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: தலையங்கம் : இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை?
Share
31°C
Chennai
few clouds
32° _ 31°
65%
6 km/h
Thu
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
Sri Lankan Tamils citizenship issue-Online Tmail News
தலையங்கம்

தலையங்கம் : இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை?

Rohini R
Last updated: 2026-02-18 9:43 am
Rohini R Rohini R 55 Views
Share
SHARE


மொழி ஒன்று, நிலம் இரண்டு. ஒரே மொழி பேசுபவர்களைக் கடல் பிரிப்பதால் இரண்டு நாடுகளின் குடிமக்களாயினர். அவர்கள்தான் இந்தியத் தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும்.

1980களில் தொடங்கி 1990களின் பிற்பகுதி வரை இலங்கையில் சிங்கள இனவாத அரசுகளால் தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை எதிர்த்தும், உரிமை கோரியும் தமிழர் அமைப்புகள் நடத்திய ஆயுதப் போராட்டங்களால் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் பாதிப்புக்குள்ளான இலட்சக்கணக்கான மக்கள் படகுகளில் தங்கள் உயிரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு இந்தியாவுக்கு வந்தார்கள். 2009ஆம் ஆண்டு இலங்கையில் மிகப்பெரிய இன அழிப்பு நடந்து முடிந்தது. தமிழர்கள் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஆனால், இந்தியாவுக்கு வந்த இலங்கைத் தமிழர்கள் உயிர் இருந்தும் உரிமை இல்லாத நடைப்பிண வாழ்க்கைக்குள்ளாயினர்.


இலங்கையிலிருந்து (Sri Lanka )வந்த தமிழர்கள் இராமேஸ்வரம் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டு, அங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள முகாம்களுக்குத் அனுப்பி வைக்கப்பட்டனர். 1983 முதல் 2009 வரை இலங்கையிலிருந்து வந்தவர்களில் பலர் ஒவ்வொரு கட்டத்திலும் திரும்பிச் சென்ற நிலையில், தற்போது தமிழ்நாட்டில் உள்ள 103 முகாம்களிலும், வெளியிடங்களிலுமாக ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் இருக்கிறார்கள். குழந்தைகள், முதியோர் தவிர்த்து, முறையான பதிவில் இருப்பவர்களின் எண்ணிக்கை 89ஆயிரம் என்கிறது அரசுத் தரப்பு புள்ளிவிவரம்.

இவர்களில் பலர் 35 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மண்ணில்தான் வாழ்கிறார்கள். அவர்களுக்கு திருமணம், குழந்தை பிறப்பு எல்லாம் இந்த நாட்டில்தான். ஆனால், அவர்களின் பூர்வீகமான இலங்கையிலும் குடியுரிமை கிடையாது. வாழ்கின்ற இந்தியாவிலும் அவர்களுக்குக் குடியுரிமை கிடையாது. தமிழ் வழிச் சொந்தங்கள், தொப்புள் கொடி உறவுகள் என்று உணர்வுப்பூர்வமாக சொன்னாலும், அந்த உணர்வை அரசியலாக்கி உலக நாடுகளில் உண்டியல் குலுக்கி கட்சிகள் நடத்தினாலும், இந்திய குடியுரிமைச் சட்டத்தின் படி இங்கே வாழும் இலங்கைத் தமிழர்கள், சட்ட விரோதக் குடியேறிகளாகவே கருதப்படுகின்றனர்.

தகரக் கொட்டகையால் ஆன வீடு, கேம்ப் மக்கள் என்ற பேரு, பொது சமூகத்துடன் கலந்து வாழ முடியாத தனிமை, குடியுரிமையற்ற வாழ்க்கை என பல ஆண்டுகளாகத் தவித்து வந்த இவர்களின் நலனில் அக்கறை செலுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 2021ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதி முகாம்களை, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் எனப் பெயர் மாற்றம் செய்தார். அத்துடன், அவர்களின் மறுவாழ்வுக்கான 300 கோடி ரூபாய் மதிப்பிலானத் திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்துவதற்காக ஓர் ஆலோசனைக் குழுவையும் அமைத்தார்.

மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் உடனடித் தேவையாக முழுமையான கான்க்ரீட் வீடுகள், மாதந்தோறும் பணக்கொடை, கல்வி உதவித்தொகை, மகளிர் சுயஉதவிக்குழுக்களான நிதி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவற்றுடன் தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அனைத்தும் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்குக் கிடைத்திடச் செய்தார். அன்றாட வாழ்க்கையில் ஒளி ஏற்றப்பட்டது. எனினும், தொலைநோக்குப் பார்வையுடனான நீண்டகாலத் தீர்வு என்பது அவர்களுக்கான குடியுரிமைதான்.

மத்திய பா.ஜ.க அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளிலிருந்து இந்தியா வரும் இந்துக்களுக்கு உரிமை வழங்கப்பட்டது. ஆனால், இலங்கையைச் சேர்ந்த இந்துக்களான தமிழர்களை இந்தப் பட்டியலில் பா.ஜ.க அரசு சேர்க்கவில்லை. திட்டமிட்டு தவிர்த்துவிட்டது.

தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களில் பலர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அதாவது, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இங்கிருந்து இலங்கைக்கு தோட்ட வேலையாகச் சென்றவர்களின் வாரிசுகள். அவர்களை இந்தியா திரும்ப அழைத்துக்கொள்ள ஒப்பந்தங்களும் உள்ளன. அத்துடன், கடந்த 40 ஆண்டுகளில் இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்தவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு சட்டரீதியாக குடியுரிமை வழங்குவதற்கான உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் முன்னுதாரணங்களாக உள்ளன.

தமிழ்நாடு அரசு அமைத்த இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழுவன் சார்பில் நீண்டகாலத் தீர்வுக்கான இடைக்கால அறிக்கை 2023 செப்டம்பர் மாத இறுதியில் முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், குடியுரிமை பெறுவதற்கான சான்றுகள், ஆவணங்கள், சட்டவிதிமுறைகள் குறித்து கலெக்டர்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவையனைத்தையும் ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கிடவும், சட்டச்சிக்கல் இல்லாமல் இங்கேயே தங்கியிருக்க நீண்ட கால விசா வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.(Online Tamil News)

நாடற்றோர், நாதியற்றோர் என்ற நிலை மாறி, இந்தியக் குடியுரிமைப் பெற்ற தமிழ்நாட்டவர் என்ற காலம் இலங்கைத் தமிழர்களுக்கு விரைவாக கனியுமா?

TAGGED:CAA ControversyeditorialHuman RightsIndian Citizenship DebateM.K. StalinNarendra ModiRefugee RightsSri Lankan RefugeesSri Lankan TamilsTamil Nadu Politics
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Today Rasi Palan 18.02.2026-Online Tamil News இன்றைய ராசிப்பலன் – 18.02.2026
Next Article mallikarjun kharge தவெகவுடன் கூட்டணி தற்கொலைக்கு சமம்! கார்கே ஆலோசனையில் முடிவு! 

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
Apr 2, 2026 at 6:44 pm
dhanabal
தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
Apr 2, 2026 at 6:33 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?