கட்சியும் சின்னமும் அன்புமணி வசம் சென்றுவிட்டது. இதை வைத்து அன்புமணியும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போய்விட்டார்.
கட்சியையும் சின்னத்தையும் மீட்க ஒரு பக்கம் சட்டப்போராட்டம் நடத்தி வரும் ராமதாஸ், இன்னொரு பக்கம் தனிக்கட்சிக்கான வேலைகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் தங்களின் எதிர்காலம் குறித்து தனது ஆதரவாளர்கள் கலக்கத்தில் இருப்பதை உணர்ந்து அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் ராமதாஸ், அவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

அதில், ‘’நம் பலம் அப்படியேதான் உள்ளது. உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். நாம் பயணிக்க வேண்டிய தூரம் நீண்டது. அதற்காக கிடைக்கின்ற வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது. அந்த வாகனத்தில்தான் நாம் பயணிக்கப்போகிறோம்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அருகே வந்துவிட்ட வாகனம் எது? அது கூட்டணியா? தனிக்கட்சியா? என்ற சலசலப்பில் இருக்கிறது ராமதாஸ் ஆதரவாளர்கள் வட்டம்.



