தென் கொரியாவில் உள்ள கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 59 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிற்சாலையில் வேலை நடந்து கொண்டிருந்தபோது திடீரென பற்றிய தீ, மிக வேகமாக பரவியதால் அங்கிருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத்தொடர்ந்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தற்போது அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்தத் தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் குறித்து அந்நாட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.(Online Tamil News)


