நடிகரும், தவெக தலைவருமான விஜய் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது தனது அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விபரங்களை தாக்கல் செய்திருக்கிறார்.
தனது பெயரிலும் தன் மனைவி சங்கீதா பெயரிலும், சகோதரி வித்யா அறக்கட்டளை பெயரிலும் உள்ள சொத்துக்கள் விபரங்களை அறிவித்துள்ளார்.

இதில் குறிப்பிடத்தக்க விபரம் என்னவென்றால் விஜய் யாருக்கெல்லாம் கடன் கொடுத்திருக்கிறார் என்கிற விபரங்களை அளித்திருக்கிறார். அதாவது தாய், தந்தை, மகன், மகள், மனைவிக்கும் கடன் கொடுத்திருப்பதாக கணக்கு காட்டி இருக்கிறார் விஜய். சுனில் ராஜ் என்பவருக்கு ரூ.1,50,00,000ம், என்.ஆனந்துக்கு ரூ.3,00,00,000ம் , வி.ரவிச்சந்திரனுக்கு ரூ.5,00,00,000ம், ஏ.எல்.பி. ஆண்டானியஸ் பிரிட்டோவுக்கு ரூ.20,00,00,000ம், கோகிலாம்பாள் கல்வி அறக்கட்டளைக்கு ரூ.20,00,00,000ம், ஜெயா நகர் பிராபர்டி பி லிட்டுக்கு ரூ.94,00,000ம், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ரூ.3,02,71,931ம், தாய் ஷோபா சந்திரசேகருக்கு ரூ.8,71,2018ம், மனைவி சங்கீதாவுக்கு ரூ.12,60,53,615ம், மகன் ஜேசன் சஞ்சய்கு ரூ.8,78,479ம், மகள் திவ்யா சாசாவுக்கு ரூ.4,60,000ம், வித்யா சாரிடபுள் டிரஸ்டுக்கு ரூ.5,84,21,000ம், விஜய் வித்யாசிரம் பள்ளிக்கு ரூ.24,96,000ம் கடன் அளித்திருப்பதாக கணக்கு காட்டி இருக்கிறார் விஜய்.
இதுதான் மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. குடும்பத்தினருக்கு கொடுத்த பணத்தை கடன் கணக்கில் விஜய் கொண்டு வந்திருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.



