• அரசியல்
    அரசியல்Show More
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Mediterranean Sea
    அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
    2026-04-02
    NASA Artemis II mission
    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
    2026-04-02
    Iran drone attack
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    ghanaian-Ebo Nova-fraud-Prophet-God-postponed-The end of the world
    உலகம்
    “உலகம் அழியப்போகிறது” – மக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த போலி தீர்க்கதரிசி
    2025-12-26
    Israel Prime Minister office strike
    உலகம்
    இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை தாக்கிய ஈரான்: நெதன்யாகுவின் நிலை என்ன?
    2026-03-02
    Donald Trump, NATO countries,
    உலகம்
    “நேட்டோ நாடுகள் கோழைகள்” – ஈரானுக்கு எதிரான போரில் ஆதரவு தராததால் டிரம்ப் விமர்சனம்
    2026-03-21
    Kim Jong Un missile test
    உலகம்
    எதிரிகளுக்கு எச்சரிக்கை: ஏவுகணை சோதனையை நடத்திய கிம் ஜாங் உன்!
    2026-03-11
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: தலையங்கம் : பா.ஜ.க. ஆலிங்கனத்தில் அ.தி.மு.க!
Share
31°C
Chennai
few clouds
32° _ 31°
65%
6 km/h
Thu
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
ONLINE-TAMIL-NEWS-TN-POLITICS
தலையங்கம்

தலையங்கம் : பா.ஜ.க. ஆலிங்கனத்தில் அ.தி.மு.க!

Last updated: 2026-01-22 8:07 am
Spark Desk 47 Views
Share
SHARE

மகாபாரதக் கதையில் திருதராஷ்ட்ரன் ஆலிங்கனம் என்ற சொல் உண்டு. கௌரவர்களில் மூத்தவரான துரியோதனின் தம்பிகளின் ஒருவர் திருதராஷ்ட்ரன். அவருடைய இயல்பு, நண்பர் போல கட்டித் தழுவி, இறுக்கி நெரித்து அவர்கள் கதையை முடித்துவிடுவார். பாரதக் கதையில் அதற்குப் பெயர் திருதராஷ்ட்ர ஆலிங்கனம். அரசியலில் நட்பு காட்டுவது போல அரவணைத்து, அப்படியே கழுத்தை நெரிப்பதை, திருதராஷ்ட்ர ஆலிங்கனம் என்கிறார்கள். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ள (ADMK) அ.தி.மு.க நிலை அப்படித்தான் உள்ளது.

கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டுப் போனவர்களை சேர்க்கவே முடியாது என்று உறுதியாகச் சொல்லி வந்தார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அவர் குறிப்பிட்டுச் சொன்னது சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைத்தான். அவர்களோ, அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமிதான் என்று குற்றம் சாட்டி வந்தார்கள். இந்நிலையில்தான், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் அ.மு.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இணைந்திருக்கிறார். (BJP) பா.ஜ.க.வின் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் தினகரன் கட்சி கூட்டணியில் இணைந்தது.

தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருக்கிறேன்’‘ என்று வார்த்தைகளை கவனமாகச் சொன்னார் தினகரன். இந்திய அளவில் பா.ஜ.க. கூட்டணிக்குப் பெயர், தேசிய ஜனநாயக கூட்டணி. 1999 முதல் இந்தப் பெயரில்தான் அந்தக் கூட்டணி இயங்கி வருகிறது. பா.ஜ.க.வைத் தவிர மற்ற கட்சிகள், கூட்டணிக்குள் வரும் போகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க.தான், மாநில அளவில் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சி என்று அமித்ஷா தொடங்கி நயினார் நாகேந்திரன் வரை பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் சொல்லி வந்தனர்.

தமிழ்நாட்டில் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சியான அ.தி.மு.க இல்லாமலேயே தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அ.மு.மு.கவைக் கூட்டணிக்குள் கொண்டு வந்துள்ளது பா.ஜ.க. திருதராஷ்ட்ர ஆலிங்கனத்தின் ஒரு பகுதி இது. அதாவது, “மாப்பிள்ளை இவர்தான். ஆனா இவர் போட்டிருக்கறி சட்டை என்னோடது” என்கிற படையப்பா படத்தின் காமெடி போல, சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்குத் தலைமை தாங்குவது அ.தி.மு.க.தான். ஆனால், தினகரனை நாங்களே முன்னின்று சேர்த்துக் கொண்டோம் என்பதுபோல செயல்பட்டுள்ளது பா.ஜ.க.

இன்றைய நிலையில், பா.ஜ.க.வின் உத்தரவுகளை மீறி செயல்படக்கூடிய நிலையில், அ.தி.மு.க. இல்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலமின்றி மருத்துவமனையில் இருந்தபோதே, அ.தி.மு.க. மீதான பா.ஜ.க.வின் திருதராஷ்ட்ர ஆலிங்கனம் ஆரம்பமாகிவிட்டது. ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என அடுத்தடுத்து முதலமைச்சர் பொறுப்புக்கு வந்தவர்களையும் அரவணைப்பது போலக் காட்டி, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கும்போதே தலைமைச் செயலகத்தில் மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் உள்ளே நுழைந்து சோதனை நடத்தின. அ.தி.மு.க. அமைச்சர்கள், உறவினர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அ.தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டு, அ.ம.மு.க. என்ற கட்சியைத் தொடங்கிய தினகரனையும் பா.ஜ.க. விட்டு வைக்கவில்லை. அவர் மீதான மோசடி வழக்கின் அடிப்படையில் டெல்லி திகார் சிறையில் அடைத்தனர்.

அ.தி.மு.க.வின் அனைத்து தரப்புமே பா.ஜ.க.வின் திருதராஷ்ட்ர ஆலிங்கனம் எனும் இறுக்கமான பிடிக்குள் வந்துவிட்டன. டெல்லியிலிருந்து அழைப்பு வந்தால் எடப்பாடி பழனிசாமியும் அவசரமாக ஓடுகிறார். அங்கே கார் மாறி, மாறி சென்று அமித்ஷாவை சந்திக்கிறார். மீடியாக்களிடம் முகம் காட்டாமல் கர்சீப்பால் மறைத்துக்கொள்கிறார். டி.டி.வி. தினகரனும் டெல்லி அழைத்தால் அவசரமாக ஓடுகிறார். மேலிடம் சொன்னவுடன் கூட்டணியில் சேர்ந்து விடுகிறார். மற்றவர்களின் நிலையும் இதுதான்.

பா.ஜ.க. எந்தெந்த மாநிலத்தில் இதுபோல கூட்டணி அமைத்ததோ அந்தக் கட்சிகளையெல்லாம் தனது திருதராஷ்ட்ர ஆலிங்கனத்தால் காலி செய்திருக்கிறது. இந்துத்வா கொள்கை கொண்ட சகோதர கட்சியான மகாராஷ்ட்ராவின் சிவசேனாவில் தொடங்கி, தமிழ்நாட்டில் அ.தி.மு.க வரை இதுதான் பா.ஜ.க.வின் அரசியல் ஃபார்முலாகவாக உள்ளது. இதுவரை சொந்தக்காலில் தமிழ்நாட்டில் எந்த வெற்றியும் பெற முடியாத பா.ஜ.க,வின் தலைமை, அ.தி.மு.க.வை ஆலிங்கனம் செய்து, அந்த இடத்தில் தன்னை நிறுத்திக் கொள்ளும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தன்னை பா.ஜ.க. அரவணைப்பதே அழிப்பதற்காகத்தான் என்பதை அறிந்தும் அறியாதது போல பிடிக்குள் இறுகி, கதறக்கூட முடியாத நிலையில் இருக்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.

TAGGED:ADMK BJP relationshipADMK political crisisBJP ADMK allianceBJP alliance strategy IndiaDhinakaran BJP NDA allianceDhritarashtra embrace political analogyIndian political editorialonline tamil newsTamil Nadu NDA politics
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Today Rasi Palan-Tamil Horoscope Today-Onlin Tamil News இன்றைய ராசிப்பலன் – 22.01.2026
Next Article opannerselvam குன்னம் எடுத்த முடிவு – குழப்பத்தில் பன்னீர்

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Mediterranean Sea
அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
Apr 2, 2026 at 6:59 pm
Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
Apr 2, 2026 at 6:44 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?