மக்களால் பலமுறை ஓரங்கட்டப்பட்ட அதிமுக எனும் இருட்டுக்குள் ஏன் கல்லெறிய வேண்டும்? என்று கேட்டு நக்கலடித்தார் விஜய்.
விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாடு முதல் அதிமுகவை விமர்சிக்காமல் இருந்து வந்தார் தவெக தலைவர் விஜய். அதிமுகவை விமர்சிக்காததன் பின்னணி என்ன? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

நாமக்கல் கூட்டத்தில் இருந்து அதிமுகவை விமர்சிக்க ஆரம்பித்தார். கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசியபோது, அதிமுகவை ஊழல் கட்சி என்றும், பாஜக கூட்டணியில் மற்றும் பலர் என்று அதிமுக மிகக் கடுமையாக விஜய் விமர்சித்தபோது, விஜய்யையும் தவெகவையும் போட்டு அடி அடி என்று அடித்து நொறுக்கிவிட்டனர் அதிமுகவினர்.
இந்த நிலையில் இன்று சேலம் கூட்டத்தில் பேசியபோதும், அதிமுக, பாஜக பற்றி ஏன் பேசுவதில்லை? திமுகவை மட்டுமே எதற்கு டார்கெட் செய்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள்.

இது யாருக்கான எலெக்ஷன்? தமிழ்நாடு சட்டசபைக்கான சட்டமன்ற தேர்தல். யார் மாநிலத்தை ஆள்கிறார்? ஆட்சியில் இருக்கும் திமுகவை அகற்ற வேஎண்டும் என்றால் அக்கட்சியுடன் தானே மோத வேண்டும்.
அதைவிட்டுவிட்டு, ஏன் பலமுறை மக்களால் டெலிட் செய்யப்படவர்களை எதிர்க்க வேண்டும். ஏன் டார்க்னெஸ்க்குள் கல்லெறிய வேண்டும்?’’ என்று கேட்டிருந்தார்.
விஜய்யின் இந்த கேள்விகள் அதிமுகவினரை வெகுண்டெழச் செய்திருக்கிறது. அதிமுக ஐடி பிரிவு மாநில தலைவர் கோவை சத்யன், ‘’தவெக கூட்டத்திற்கு போனா இனிமேல் கையோடு சவப் பெட்டியையும் கொண்டு போக வேண்டும் என்பது உறுதி.’’ என்று வெடிக்கிறார்



