தம்பி இன்னும் டீ வரல.. என்கிற வடிவேலு காமெடி பாணியில் ‘தை’ இன்னும் முடியல என்கிறார் பன்னீர்செல்வம்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம்பிக்கையுடன் சொல்லி வந்தார் பன்னீர்செல்வம். ஆனால் தை பிறந்த பின்னரும் கூட அதிமுக கதவடைப்பு திறக்கவே இல்லை. பாஜகவும் கைவிரித்து விட்டது.
கூட்டணிக் கட்சிகளுடன் இன்று (23.01.2026) மதுராந்தகம் பொதுக்கூட்ட மேடை ஏறுகிறார் பிரதமர் மோடி. இந்த மேடையில் நேற்று முன் தினம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரன் போட்டோவும், நேற்று கூட்டணியை உறுதி செய்த ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம் போட்டோவும் இடம்பெற்றுள்ளன. கூட்டணியை இன்னும் இறுதி செய்யவில்லை என்று கூறும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் போட்டோவும் இடம்பெற்றுள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த பன்னீர்செல்வத்தின் போட்டோ இடம்பெறவில்லை.

ஆனாலும் ’தை’ முடிவதற்கு இன்னும் நாட்கள் உள்ளன. தை முடிவதற்குள் உரிய பதில் சொல்வேன் என்று சமாளிக்கிறார் பன்னீர்.
இன்னும் 2 தினங்களில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் இருக்கிறது. அடுத்து என்ன செய்வது என்பது குறித்து அங்கே முடிவு செய்யப்படும் என்கிறார்.
என்.டி.ஏ. கை விரித்துவிட்ட நிலையில் டிவிகேவும், டிஎம்கேவும்தான் கதவை திறந்திருக்கின்றனர். என்ன செய்யப்போகிறார் பன்னீர்?



