தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், கடந்த நாடாளுமன்ற தேர்தலில்
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். அவர் வரும் 2026 தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் கூட்டணியே வெற்றி பெறும் என்று சொல்லி வருகிறார். மேலும், 2026 தேர்தலில் வென்றால் ஆட்சியில் பங்கு கேட்போம் என்றும் சொல்லி வருகிறார்.

இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தினகரன், ஜிகே வாசன், ஏசி சண்முகம் இணைந்துள்ள நிலையில், ஜான் பாண்டியனும் இக்கூட்டணியில் இணைய முடிவெடுத்துள்ளார். இதற்கு தங்களுக்கு 10 சீட் வேண்டும் என்றும் அதுவும் நீங்களாக கொடுக்கின்ற இடங்கள் வேண்டாம். எங்களுக்கு சாதகமான நாங்கள் வெற்றி பெறும் இடங்களை மட்டுமே தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
பேச்சுவார்த்தையில் இதை உறுதி செய்தால் கூட்டணிக்கு வர தயார் என்று சொல்லி இருக்கிறார். ஜான் பாண்டியன் வைத்த இந்த நிபந்தனையைக் கேட்டு பியூஷ் கோயலுக்கு தலை சுற்றி இருக்கிறது. என்ன நடக்கப்போகிறதோ?



