ஜனநாயகன் தான் தனது கடைசி படம் என்று விஜய் அறிவித்திருந்தார். அந்த முடிவில் இப்போது பின் வாங்கி இருக்கிறார்.
சென்சார் போர்டு பிரச்சனையால் பொங்கலுக்கு வெளியாக வேண்டிய ஜனநாயகன் தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருந்தது. மூன்று மாதங்களுக்கு மேல் பட வெளியீடு தள்ளிப்போய்க் கொண்டே இருந்ததால் படத்தின் பாதுகாப்பிற்கும் பங்கம் ஏற்பட்டுள்ளது. இப்படம் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

இப்படத்தினை பகிருந்து பலரும் பார்த்துவருகின்றனர். தமிழகத்தில் மட்டும் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இப்படத்தை பார்த்துவிட்டனர். ஓடிடி உரிமை 180 கோடி ரூபாய் கேட்டிருந்த நிலையில் தற்போது 50 கோடி ரூபாய்க்கு கீழ்தான் விலை பேசப்படுகிறது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமை முழுவதுமாக பாதிக்கப் பட்டிருக்கிறது. இப்போது இருக்கும் சூழல் தேர்தல் முடிந்து இப்படம் ரிலீஸ் ஆனாலும் கூட தயாரிப்பாளருக்கு 500 கோடி ரூபாய் நஷ்டம் அடைவதற்கு வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
ஜனநாயகன் லீக் விவகாரத்தில் நடிகர் விஜய் தலையிடாவிட்டாலும் திரைத்துறையினர் புகாரின் பேரில் தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை மன உளச்சலை போக்க முடிவு செய்திருக்கிறார் விஜய். தேர்தல் முடிந்ததும் அட்லீ அல்லது யோகேஷ் கனராஜ் , இல்லையேல் நெல்சன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த நேரத்தில் எந்த இயக்குநர் தயாராக இருக்கிறாரோ அவரது இயக்கத்தில் நடிக்கும் முடிவில் உள்ளார் விஜய். இந்த படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. அநேகமாக அதுதான் விஜய்யின் கடைசிப்படமாக இருக்கும் என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.



