ஜனநாயகனுக்கு அநீதி நடந்துவிட்டது என்று ஊரே கதறிக்கொண்டிருக்கிறது. ஆனால் சம்பந்தப்பட்ட விஜய் மவுனமாகவே இருக்கிறார்.
சென்சார் பிரச்சனையால் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வேண்டிய ஜனநாயகன் படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முழு காட்சிகளும் இணையங்களில் லீக் ஆகிவிட்டது. இதனால் பட தயாரிப்பாளருக்கு 500 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படும் என்கிறார்கள்.
ஜனநாயகனுக்கு நேர்ந்த அநீதி குறித்து திரைத்துறையினரும் அரசியல் பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விஜய் எதிர் துருவத்தில் இருக்கும் ரஜினி கூட இந்த விசயத்தில் ஈகோ பார்க்காமல் குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் சம்பந்தப்பட்ட விஜய் இப்போது வரைக்கும் இது தொடர்பாக பேசவில்லை. ஒரு டுவிட்டர் பதிவு கூட போடவில்லை. மாறாக தேர்தல் களப்பணிகளை மேற்கொள்ளுங்கள் என்று கட்சியினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார் விஜய். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இவ்வளவு பெரிய விசயம் நடந்தும் இப்படத்தின் தயாரிப்பாளரோ, விஜய் தரப்பினரோ காவல் நிலையத்தில் புகார் எதுவும் அளிக்காமல் அமைதியாக இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
இதையெல்லாம் பார்க்கும் போது, தேர்தல் நெருக்கத்தில் இந்தப்படம் தனக்கு வாக்குசேகரிக்கும் என்று நினைத்து விஜய்யே படத்தை ரிலீஸ் செய்துவிட்டதாக எழும் பேச்சுக்களை நம்பித்தான் ஆகவேண்டுமோ என்ற கேள்வி எழுகிறது.



