2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தவெக சார்பில் விருப்ப மனுக்கள் விநியோகிக் கப்பட்டிருந்தன. அந்த விருப்ப மனுக்கள் சமர்ப்பிக்க இன்று இறுதி நாள் என்று தலைமை அறிவித்திருந்தது.

அதன்படி இன்று தவெக தலைமை அலுவலகம் பனையூருக்கு சிலர் வந்திருந்தனர். ஆனால் தலைமை அலுவலகத்தில் தலைமை நிர்வாகிகள் யாரும் இல்லை.
வந்தவர்கள் சிலரும் அங்கிருப்பவர்களிடம் விருப்ப மனுவை அளித்துவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் பனையூர் அலுவலகமே வெறிச்சோடிக் காணப்படுகிறது.

ஏன் என்ன ஆச்சு? என்ற கேள்விகளுக்கு, விருப்ப மனுக்களை ஆன்லைன் மூலமாக பெறப்பட்டுவிட்டது என்கிறது பனையூர் தவெக வட்டாரம்.



