இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலின் படி 42 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை மூன்று கட்டமாக வெளியிட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாம். முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 23 பேர் இருந்தனர். இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களையும் சேர்த்து 150 பேர் பட்டியலில் உள்ளனர்.

அறிவிக்கப்பட்டிருக்கும் 150 வேட்பாளர்களின் 17 பேர் பெண்கள். நடப்பு எம்.எல்.ஏக்கள் 46 பேருக்கு சீட் வழங்கி இருக்கிறார் பழனிசாமி. செங்கோட்டையனின் கோட்டை கோபியில் பிரபுவும், ஓபிஎஸ் கோட்டை போடியில் நாராயணசாமியும் களமிறங்குகிறார்கள்.
இதில்,
1.கும்மிடிப்பூண்டி – சுதாகர்
2.ஆம்பூர் – வெங்கடேசன்
3.பர்கூர் – கோவிந்தராஜன்
4.பாப்பிரெட்டிபட்டி – மரகதம் வெற்றிவேல்
5.செங்கம் – வேலு
6.வந்தவாசி – ராணி
7.குளித்தலை – கருணாகரன்
8.மணப்பாறை – விஜயகுமார்
9.திருச்சி கிழக்கு – ராஜசேகரன்
10.லால்குடி – லீமா ரோஸ்
11.முசிறி – யோகநாதன்
12.துறையூர் – சரோஜா
-உள்ளிட்ட 42 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.



