இழுத்தடிக்கப்படும் ஜனநாயகன் படத்தின் வெளியீடு விஜய்க்கு தணிக்கை வாரியம் சாதகம் செய்கிறதா? என்ற கேள்வி எழக்காரணமாகிறது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வரும் தனது படம் அரசியல் பேசினால் அது தேர்தலில் கை கொடுக்கும் என்று கணக்கு போட்டுத்தான் பகவந்த் கேசரி தெலுங்கு படத்தின் ரீமேக் என்றாலும் அதில் அதிகம் அரசியல் மசாலா தூவி ஜனநாயகனை எடுத்திருக்கிறார் விஜய்.

பொங்கலுக்கு முன்னதாகவே ரிலீஸ் ஆக வேண்டிய இந்தப்படம் தணிக்கை வாரியம் தொடுத்த வழக்கினால் அடுத்த மாதத்திற்கு தள்ளிப்போகும் நிலைக்கு வந்திருக்கிறது.
என்.டி.ஏ. கூட்டணியில் விஜய்யை வரவைப்பதற்காக பாஜக நடத்தும் நாடகம்தான் ஜனநாயகன் படத்திற்கு வந்த சிக்கல் என்ற பேச்சு ஒரு புறம் இருக்கையில், விஜய்க்கு தணிக்கை வாரியம் சாதகம் செய்கிறதா? பாதகம் செய்கிறதா? என்கிற சந்தேகத்தினை பலரும் எழுப்பி வருகிறது.
பாஜகவின் பின்னணியில்தான் விஜய் இயங்குகிறார். அவருக்கு தேர்தலில் அதிக செல்வாக்கினை கூட்டுவதற்காகத்தான் திட்டமிட்டே ஜனநாயகன் படத்தினை தேர்தல் நெருக்கத்திற்கு கொண்டு செல்கிறார்கள் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.



