• அரசியல்
    அரசியல்Show More
    kak mukil
    இவருக்கே சீட் கொடுக்கலையா எடப்பாடி? அதிமுகவினர் அதிர்ச்சி
    Mar 31, 2026 at 7:24 pm
    leema
    ஒரு MLAவுக்கு ரூ.100 கோடி – அதிமுகவை கைப்பற்ற மார்ட்டின் மனைவி திட்டம்?
    Mar 31, 2026 at 12:07 pm
    விஜய் குடுமதின்ன்ன்ன்ன்
    குடும்பத்தினரை கடனாளிகளாக்கி இழிவுபடுத்திய விஜய்
    Mar 30, 2026 at 6:32 pm
    perambur vijay
    விஜய்க்கு என்ன ஆச்சு?ஆனந்த் சொல்வது உண்மையா?
    Mar 30, 2026 at 5:01 pm
    modi mamatha
    பாஜகவுக்கு ஓட்டு போட்டா மீன், கறி, முட்டை சாப்பிட முடியாதா?
    Mar 30, 2026 at 3:10 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19

    அண்மைச் செய்திகள்

    kak mukil
    இவருக்கே சீட் கொடுக்கலையா எடப்பாடி? அதிமுகவினர் அதிர்ச்சி
    2026-03-31
    tamil horoscope,
    இன்றைய ராசிப்பலன்-  31.03.2026
    2026-03-31
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    2026-03-31
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    2026-03-31
  • இந்தியா
    இந்தியாShow More
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
  • உலகம்
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    India supplies fuel to Sri Lanka
    உலகம்
    இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
    2026-03-30
    online-tamil-news
    உலகம்
    உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
    2026-03-28
    Online Tamil News
    உலகம்
    நோபல் பரிசு வென்ற நர்கீஸ் முகமதிக்கு 7.5 ஆண்டுகள் சிறை : காரணம் என்ன?
    2026-02-09
    online-tamil-news-world-news-world-record
    உலகம்
    உலக சாதனை: மவுண்ட் எல்ப்ரஸில் ஆக்ஸிஜன் இன்றி 24 மணி நேரம்!
    2026-01-24
    nasa moon
    உலகம்
    திரும்பும் சரித்திரம்! நிலவுக்குச் செல்லும் முதல் பெண்!
    2026-02-03
    Venezuela-Nicolas Maduro-Donald Trump-US Attack-Venezuela Crisis-International Politics-Latin America-World News-US Military Action-Drug Trafficking Allegations
    உலகம்
    வெனிசுலா மீது தாக்குதல் ஏன்?… அமெரிக்கா சொல்லும் காரணம் என்ன?
    2026-01-03
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: 22 ஆண்டுகள் – 21 பழிக்குப்பழி மரணங்கள்! மதுரையின் தீராத அரசியல் பகை 
Share
28°C
Chennai
mist
28° _ 27°
78%
2 km/h
Wed
30 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
க்ரைம்

22 ஆண்டுகள் – 21 பழிக்குப்பழி மரணங்கள்! மதுரையின் தீராத அரசியல் பகை 

Last updated: 2026-01-24 5:49 pm
T.R.Kathiravan 142 Views
Share
latest tamil news
SHARE

போஸ்டர் ஒட்டியதில் எழுந்த மோதல் 21 பழிக்குப் பழி கொலைகளை வாங்கி 22 ஆண்டுகளுக்கும் மேலாக தீராப்பகையாக எரிந்து கொண்டிருக்கிறது.  கூலிப்படையினர் வைக்காமல் உறவுகளுக்குள்ளேயே இந்த பழிக்குப்பழி கொலைகள் நடந்து வருகிறது.

பண்ணையார் தரப்புக்கும் பசுபதி பாண்டியனுக்கும் இடையே எழுந்த சாதாரண  வாய்க்கால்  தகராறு இரு சமூகத்திற்கு இடையேயான பகையாக மாறி அது 32 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து இரு தரப்பிலும் 50க்கும் மேற்பட்ட பழிக்குப் பழி கொலைகள் வாங்கியது.  இதே போன்று போஸ்டர் ஒட்டியதில் எழுந்த மோதலில் மதுரையிலும் 22 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து 21 பழிக்குப் பழி கொலைகளை  வாங்கி வருகிறது  உறவினர்களுக்குள் எழுந்த அரசியல் பகை. 

gurusamy rajapandi

என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வீ.கே.குருசாமி – ராஜபாண்டி. உறவினர்களான இவர்கள் சிறு வயதிலேயே குடும்பத்தினருடன் மதுரைக்கு இடம்பெயர்ந்துவிட்டனர்.  வளர்ந்து ஆளாகியதும் அரசியலில் அடியெடுத்து வைத்தனர். திமுக மண்டல தலைவர் ஆனார் குருசாமி. அதிமுக மண்டல தலைவர் ஆனார் ராஜபாண்டி. அங்கேதான் இருவருக்கும் இடையே மோதல் உருவானது.

2003ல் உள்ளாட்சித்தேர்தலின் போது போஸ்டர் ஒட்டுவதில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது.  ராஜபாண்டிக்கு உதவியாக இருந்த அவரின் அண்ணன் மகன் சின்ன முனீசை குருசாமி தரப்பு வெட்டி கொலை செய்தது.   அரசியல் ரீதியாக மிரட்டுவதற்காக அடித்து உதைத்து போட்டுவிட்டு கிளம்பியபோது, என்னை உயிருடன் விட்டால் உங்க ஒருத்தனையும் உயிரோட விடமாட்டேன் என்று சின்ன முனூசின் பேசவும் ஆத்திரப்பட்டு கொலை செய்துவிட்டனர்.  இதில் உறவினர்கள் இரு தரப்புக்கும் இடையே ஜென்ம பகை ஆனது.

gurusamy

2008ல் சின்ன முனீஸ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வழுக்கை முனீசை ராஜபாண்டி தரப்பு கொலை செய்தது.  அடுத்து குருசாமியின் உறவினர்கள் மாரிமுத்து, ராமமூர்த்தியை இரட்டைக்கொலை செய்தார் சின்ன முனீசின் தம்பி வெள்ளைக்காளி. இந்த கொலை வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்ததும் 2013ல் குருசாமியின் தங்கை கணவர் பாம்பு பாண்டியை கொலை செய்தார்.  இந்த கொலையில் உடனிருந்த வெள்ளை காளியின் உறவினர் சகுனி கார்த்தியின் தாய்மாமன் மயில் முருகனை குருசாமி தரப்பு வெட்டிச்சாய்த்தது.  அதன் பின்னர் 2015ல் முனியசாமியை படுகொலை செய்தார் வெள்ளைக்காளி.  2016ல் குருசாமியின் மகள் கணவரின் தம்பி காட்டுராஜாவை  கொலை செய்தார் வெள்ளைக்காளி. 

இந்த பழிக்குப்பழி கொலையில் 2017ல் குருசாமியின் மகன் மணி, ராஜபாண்டியனின் மகன் தொப்புலி முனுசாமியை பைக்கில் கடத்திச்சென்று பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றுவிட்டார். அதே ஆண்டில் குருசாமியின் ஆதரவாலர் சடையாண்டியை வெட்டிக் கொன்றுவிட்டார் வெள்ளை காளி.  இவரின் கூட்டாளிகளான சகுனி கார்த்தி, முத்து இருளாண்டி இருவரும் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர். 

latest tamil news

இந்த என்கவுண்டருக்கு குருசாமிதான் காரணம் என்று ஆத்திரம் கொண்டு அவரின் உறவினர் எம்.எஸ்.பாண்டியனை கொல்ல துடித்தார் வெள்ளை காளி.  பாண்டியன் நினைத்து அவரின் உறவினர் முனியசாமியை கொன்றுவிட்டது காளி தரப்பு.  அப்போது விட்டாலும் 2019ல் பாண்டியை  கொன்றது காளி தரப்பு.

பழிக்குப் பழி கொலையில் 2020ல் வெள்ளைக்காளி தரப்பு முத்து பாண்டியை கொன்றது குருசாமி தரப்பு.  அதே ஆண்டில் குருசாமி தரப்பைச் சேர்ந்த மணியின் நண்பர் முருகானந்தத்தை நடுரோட்டில் வெட்டி கொன்றது காளி தரப்பு.  

kaali

இதற்கிடையில் அதிமுகவில் மண்டல தலைவராக இருந்த ராஜபாண்டி 2011ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.  அதன் பின்னர் அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.  மதுரை மாநகராட்சி திமுக மண்டல தலைவராக இருந்த குருசாமி இந்த பழிக்குப் பழி கொலையில் இருந்து தப்பிக்க நினைத்து  கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்து வந்த போது 2023ல் பெங்களூரு பனசாவடி பகுதியில் உள்ள ஓட்டலில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த போது வெள்ளைக்காளி தரப்பு வெட்டிச்சாய்தது.  70 முறை வெட்டுப்பட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். 

attack

2025ல் குருசாமியின் சகோதரி மகன் கிளாமர் காளி படுகொலை வழக்கில் வெள்ளைக்காளியின் கூட்டாளி சுபாஷ் சந்திரபோஸ் என்கவுண்டர் செய்யப்பட்டார். 

காவல்துறை இரு தரப்புக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட வெள்ளைக்கொடியை பறக்கவிடவில்லை இரு தரப்பும். 

கடந்த ஆண்டு ரவுடிகள் தொடர்ந்து என்கவுன்டர் செய்யப்பட்டு வந்ததால் சிறையில் உள்ள தன் கணவர் வெள்ளைகாளியை என்கவுண்டர் செய்யக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் திவ்யா.  

vellaikaali attack

இந்நிலையின் இன்று புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வெள்ளை காளியை ஆஜர்படுத்திவிட்டு சென்னை சிறைக்கு அழைத்துச் சென்றபோது  பெரம்பலூர் அருகே போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசி தாக்கப்பட்டது. வெள்ளை காளியை தப்பிக்க வைக்க அவரது கூட்டாளிகள் நடத்திய தாக்குதலா இது? இல்லை, வெள்ளை காளியை கொலை செய்ய குருசாமி தரப்பு செய்த சம்பவமா இது? என்ற விசாரணையில் வெள்ளை காளியை குறிவைத்துதான் இந்த தாக்குதல் நடந்துள்ளது என்பது தெரியவந்திருக்கிறது.

TAGGED:ADMKDMKlatest tamil newsmadurairajapanditamilnadutamilnadulatestnewsvellaikaalivellaikaali attackvk kurusami
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad1
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Border 2 ban-Anti Pakistan sentiment film-Online Tamil News பாகிஸ்தானுக்கு எதிரான கருத்து – ‘பார்டர் 2’ படத்திற்கு தடை !
Next Article ONLINE-TAMIL-NEWSA-SPACE-NEWS-SCEINCE உலகின் மிகப்பெரிய கேமரா கண்டறிந்த அதிவேகமாகச் சுழலும் பெரும் விண்கல்!

உலகம்

Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
India supplies fuel to Sri Lanka
இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
உலகம் Mar 30, 2026 at 1:53 pm
online-tamil-news
உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
உலகம் Mar 28, 2026 at 5:58 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்

அண்மைச் செய்திகள்

kak mukil
இவருக்கே சீட் கொடுக்கலையா எடப்பாடி? அதிமுகவினர் அதிர்ச்சி
Mar 31, 2026 at 7:24 pm
Jayalalithaa Hyderabad house sealed
சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
Mar 31, 2026 at 7:03 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?