இறுதி முடிவு வரும் வரையிலும் யார் யார் பேசுகிறார்கள். என்னென்ன பேசுகிறார்கள் என்பதை சொல்ல முடியாது. எல்லா தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதனால்தான் நல்ல முடிவுக்காக காத்திருக்கிறோம். நல்ல முடிவு வெற்றிக்கான தாமதம் என்கிறார் ஜி.கே.மணி.
ராமதாஸ் தலைமையிலான பாமக ஏன் இன்னும் கூட்டணி அமைப்பதில் தாமதம் செய்து வருகிறார் என்பது குறித்து கேள்விக்கு அக்கட்சியின் நிர்வாகி ஜி.கே.மணி அளித்துள்ள பதிலில் மேலும்,

‘’முடிவை அறிவிக்க காலதாமதம் செய்வது எதற்காக என்றால், அது நல்ல முடிவாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். வெற்றி பெறக்கூடிய கூட்டணியாக இருக்க வேண்டும். தான் இடம்பெறும் கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று சொல்வற்காகத்தான் ராமதாஸ் அலசி ஆராய்ந்து ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார். வெற்றிக்கூட்டணியில் இணைய வேண்டும் என்பதற்காக ஆலோசித்து விரைவில் இறுதி முடிவை அறிவிப்பார் ராமதாஸ்’’என்று தெரிவித்திருக்கிறார்.



