அதிமுகவையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் தவெக தலைவர் விஜய். பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் களத்திலேயே இல்லை தொடர்ந்து நக்கலடித்து வருகிறார். நேற்றைய சேலம் கூட்டத்திலும் கூட மக்களால் டெலிட் செய்யப்பட்ட கட்சிகள் என்று விமர்சித்திருந்தார்.
விஜய்யின் இந்த பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி தொடங்கி அதிமுகவினர் எதிர்விமை ஆற்றி வருகின்றனர். இதில் பாஜகவின் பதிலடி என்பது படு சூடாகவே இருக்கிறது.

திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் விஜய்யின் பேச்சு குறித்த கேள்விக்கு, ‘’த்ரிஷா வீட்டில் இருந்து முதலில் விஜய் வெளியே வரவேண்டும். குடும்பத்தினருடன் நல்ல உறவு வைக்க வேண்டும். நல்ல தலைவர்கள் வழிநடத்திய இயக்கத்தை நல்ல முறையில் சொல்ல வேண்டும்.
வீட்டில் இருந்து முதலில் அவர் வெளியே வர வேண்டும். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா? அப்படித்தான் இருக்கிறது களத்தில் தவெக மட்டும்தான் இருக்கிறது என்று விஜய் சொல்லுவது. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். களத்திலேயே நிற்காமல் ஒரு கவுன்சிலர் கூட இல்லாதவன் 33 சதவிகித ஓட்டு இருக்கிறது என்று சொல்லுவதா? நடிகருக்கு கூட்டம் கூடுது அதெல்லாம் ஓட்டாக மாறுமா?’’ என்று ஆவேசப்பட்டார்.



