அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் தவெகவில் இணைந்த போது தனது சட்டைப்பையில் இருந்த ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றவில்லை செங்கோட்டையன்.
தவெகவில் இணைந்த பின்னரும் இத்தனை நாளும் விஜய் படத்தை சட்டைப்பையில் வைத்துக்கொள்ளாமல் ஜெயலலிதாவின் புகைப்படத்தையே வைத்திருந்தார் செங்கோட்டையன்.
ஏன் இப்படி? என்று பலரும் கேட்டதற்கு, இத்தனை நாளும் அம்மாவின் புகைப்படத்தை வைத்திருந்தேன். இப்போது திடீரென்று மாறிவிட்டார் என்று சொல் வந்துவிடக்கூடாது என்று சமாளித்து வந்தார்.

தவெகவில் இருந்துகொண்டு இன்னொரு கட்சியின் பிரமுகர் புகைப்படத்தை வைத்துக்கொள்வதா? என்ற சலசலப்பு எழுந்தபோது, இதற்கு தலைமை சுதந்திரம் வழங்கி இருக்கிறது. தவெகவில் ஜனநாயகம் இருக்கிறது என்றும் பெருமையாக சொல்லி வந்தார்.
இப்போது என்ன நடந்ததோ தெரியவில்லை. ஜனநாயகம் தூக்கியடிக்கப்பட்டு விட்டதா என்று தெரியவில்லை. சட்டைப்பையில் இருந்த ஜெயலலிதா புகைப்படத்தை அகற்றிவிட்டு தவெக தலைவர் விஜய் படத்தை வைத்துள்ளார் செங்கோட்டையன்.



