விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் சங்கீதா.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் சங்கீதா, விவாகரத்து மனுவில் கையெழுத்து போட்டிருந்தாலும் கூட இம்மாத இறுதியில் நீதிமன்றத்தில் அது தாக்கல் செய்யப்பட்டு, மூன்று நாட்களுக்கு பின்னர் அந்த மனு இப்போது பொதுவெளிக்கு வந்திருக்கிறது.

ஆனால் சங்கீதாவுக்கு முன்பாகவே விஜய் இந்த விவாகரத்து முடிவை எடுத்திருக்கிறார். 2017ம் ஆம் ஆண்டிலேயே விஜய் – சங்கீதா தம்பதியினரிடையே பிரச்சனை இருந்து வந்தாலும் அது 2021ல் தான் வலுத்திருக்கிறது. மகன் ஒரு வீட்டிலும், விஜய் ஒரு வீட்டிலும், மகள் லண்டனில் படிப்பதால் சங்கீதான் லண்டன் வீட்டிலும் பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
தவெகவை தொடங்குவதற்கு முன்பாகவே சங்கீதாவை பிரிகிறேன் என்று அறிக்கை தயார் செய்து அதை வெளியிட முடிவு செய்திருக்கிறார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகர் – ஷோபா இதை தடுத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அந்த நேரத்தில் விஜய்யும் சங்கீதாவும் சமாதானம் ஆனாலும் கூட மீண்டும் யாரும் சமாதானம் செய்து வைக்கமுடியாதபடி பிரச்சனை வலுத்திருக்கிறது.

அன்றைக்கு அரசியல் கட்சி தொடங்கும் நேரத்தில் விவாகரத்து அறிக்கை வெளியாவது அரசியல் வாழ்க்கையை பாதிக்கும் என்று நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு தேர்தல் நெருக்கத்தில் சங்கீதாவின் விவாகரத்து மனு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது பெண்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை சிதைக்கும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.



