இருபத்தொன்று கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வந்து மெகா கூட்டணியுடன் பிரம்மாண்ட வெற்றிக்கு தயாராகி இருக்கும் மு .க.ஸ்டாலின், ஒரு சட்டமன்ற தேர்தலில் அமைந்த கூட்டணி அடுத்த தேர்தல் வரையிலும் நீடித்ததில்லை என்கிற தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றி எழுதி இருக்கிறார். ஒரே கூட்டணி நான்காவது முறையாக தேர்தலை சந்திக்கும் அபூர்வ சரித்திரத்தை அரங்கேற்றி காட்டி இருக்கிறார்.
கழகத்தின் விருப்ப மனுவிலும் அபூர்வ சரித்திரத்தை அரங்கேற்றி இருக்கிறார் ஸ்டாலின். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் பெறப்படும் என 20.02.2026 முதல் 06.03.2026 வரை தி.மு.க. தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு, விருப்ப மனு பெறுவது நிறைவடைந்துள்ள நிலையில், மிகுந்த எழுச்சியோடும், உற்சாகத்தோடும் வரலாறு காணாத வகையில் 15,372 விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர் கழகத்தினர்.

மு.க.ஸ்டாலின் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 1,473 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
ஒரு விருப்ப மனுவினை பெறுவதற்கு ரூ.1000 ரூபாயும், அந்த மனுவினை பூர்த்தி செய்து திரும்ப கொடுக்கும் போது பொது தொகுதிக்கு ரூ.25,000 கட்டணம் , தனி தொகுதிக்கு ரூ.15,000 கட்டணம் செலுத்தி இருக்கிறார்கள். அப்படியானால் 15,372 விருப்ப மனுக்களுக்கும் சுமார் 35 கோடிக்கு மேல் கட்டணம் செலுத்தப்பட்டிருக்கிறது. அடுத்த ஆட்சியும் திமுக ஆட்சிதான் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்ததால்தான் மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனுடன் இத்தனை தொகையினை செலவு செய்திருக்கின்றனர்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ‘ஸ்டாலின் தான் வாராறு விடியல் தரப்போறாரு’ என்று நம்பிக்கையுடன் கழகத்தினர் இருந்தாலும், ஸ்டாலினுக்கு முதல்வர் ஆகும் ராசியே இல்லை என்றே பலரும் சொல்லி வந்தனர். ஆனாலும் தொண்டர்கள் ஸ்டாலின் மேல் கொண்ட நம்பிக்கையினால் 7 ஆயிரம் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவது உறுதியாகிவிட்ட உற்சாகத்தில் தான் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தி.மு.கழகத்தினர் இத்தனை ஆர்வம் காட்டி இருக்கின்றனர்.

11 தோல்விக்கு பின்னர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிகரமாக12 ஆவது தோல்வியை பழனிசாமி சந்திக்கப்போகிறார் என்பது தெரிந்ததால்தான் அதிமுகவின் விருப்ப மனுவில் கட்சியினர் சுணக்கம் காட்டினர். இதனால் விருப்ப மனுவிற்கான கால அவகாசத்தை நீட்டித்தார் பழனிசாமி. தவெகவிலோ, விருப்ப மனு ரூ.100 என்பதால் ஏராளமானோர் வாங்கினர். அது எல்லாம் என்ன ஆனதோ தெரியவில்லை.



