• அரசியல்
    அரசியல்Show More
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
    vijay campaign
    விஜய் பிரச்சாரங்களில் ஆதவ் செய்யும் செட்டப் அம்பலம்!
    Apr 1, 2026 at 5:04 pm
    ajaykumar bhalla
    கோவிந்த் மோகனா? அஜய் பல்லாவா? தவெகவுக்கு வந்த குழப்பம்
    Apr 1, 2026 at 4:22 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19

    அண்மைச் செய்திகள்

    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    2026-04-02
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    2026-04-02
    Indonesia ,
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Daily Horoscope,
    இன்றைய ராசிப்பலன்- 02.04.2026
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
  • உலகம்
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    small plane emergency landing, Online Tamil News
    உலகம்
    சாலையில் தரையிறங்கிய சிறிய ரக விமானம் – வாகனங்கள் மீது மோதி விபத்து
    2026-02-10
    Thailand-Cambodia-Conflict-Preah Vihear-Ta Muen Thom-War-Emerald Triangle
    உலகம்
    தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதல்: கோயில் சர்ச்சையிலிருந்து போர் பதற்றம் வரை
    2025-12-23
    Border issue-Thailand-Cambodia-Conflict-Military conflict-Trump-Conflict again
    உலகம்
    தாய்லாந்து – கம்போடியா நாடுகளுக்கு இடையே மீண்டும் மோதல்
    2025-12-08
    American-soldiers -receive -Christmas-gift-Rs. 1.60 lakh- Trump-announcement
    உலகம்
    ராணுவ வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு !
    2025-12-18
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: தலையங்கம் : இந்தியா கோமாளியல்ல…
Share
33°C
Chennai
few clouds
34° _ 33°
55%
5 km/h
Thu
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம் : இந்தியா கோமாளியல்ல…

Spark Web Desk
Last updated: 2025-09-02 5:55 am
Spark Web Desk Spark Web Desk 62 Views
Share
modi trump jinping
SHARE

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபரான டிரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவரை வெற்றி பெறவைத்த அமெரிக்கர்களுக்கே அதிர்ச்சியையும் வெறுப்பையும் ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் பலவும் டிரம்ப்பின் வரிவிதிப்பு உள்ளிட்ட அறிவிப்புகளால் கடும் எரிச்சலில் உள்ளன. அமெரிக்காவுடன் வர்த்தகத் தொடர்வு, ஏற்றுமதி-இறக்குமதி வணிகம் கொண்ட நாடுகளில் உள்ள தொழிலதிபர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் கடும் அச்சத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். டிரம்ப்பால் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

நீண்டகாலமாக அமெரிக்கா பனிப்போர் நடத்திய  நாடு ரஷ்யா. அமெரிக்காவுக்கு சவாலான வல்லரசாக வளர்ந்து வருவது சீனா. எல்லைப்புறத்தில் இருப்பதால் சீனாவுடன் நமக்கு நெடுங்காலமாக உரசல்கள் உண்டு. பிரதமர் மோடி பதவிக்காலத்தில் சீனா வெறுப்புமிக்க எதிரியானது. ரஷ்யா என்கிற தனிநாடு சோவியத் யூனியனாக பல நாடுகளுடன் இணைந்த குடியரசாக இருந்தபோதே இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் நல்லுறவு உண்டு. அமெரிக்காவுக்குப் பகையாகாமல் ரஷ்யாவுடன் உறவை மேற்கொண்டு வந்தது இந்தியா.

மோடி பிரதமரானதும் ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகள் நீடித்தன. அமெரிக்காவுடனான புது உறவுகள் மேம்பட்டன. டிரம்ப் முதன்முறையாக அமெரிக்க அதிபர் ஆனபோது, அவருடைய மதவெறுப்பு கருத்துகள், பழமைவாத சிந்தனைகள் ஆகியவை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஜெராக்ஸ் போல இருந்ததால் இந்தியாவின் பிரதமர் முதல் இங்குள்ள பா.ஜ.க.வினர் வரை டிரம்ப்பை தங்கள் ஆள் என்றே கொண்டாடினர். அமெரிக்க வாழ் இந்தியர்களின் (என்.ஆர்.ஐ) ஆதரவும் அவர்களின் நிதியளிப்பும் தேவை என்பதால் டிரம்ப்பின் நண்பராகத் தன்னை வெளிப்படுத்தினார் மோடி. இந்தியாவின் தேவையை அறிந்திருந்த டிரம்ப்பும் மோடியுடன் நட்பு பாராட்டினார்.

அமெரிக்காவில் ‘ஹவ்டி மோடி’ என்ற நிகழ்வு நடத்தப்பட்டு அதில் மோடியுடன் டிரம்ப் கலந்துகொண்டார். இந்தியாவில் ‘நமஸ்தே டிரம்ப்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் டிரம்ப்புடன் மோடி பங்கேற்றார். இப்படி ஈருடல் ஓர் உயிர் போல டிரம்ப்பும் மோடியும் காட்டிய நட்பு சீனாவையும் ரஷ்யாவையும் எரிச்சலாக்கியது. டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபர் ஆவதற்கு இந்தியப் பிரதமர் மோடி நேரடியாகவே பிரச்சாரம் செய்தது இதுவரை வெளிப்பட்ட ‘சாணக்கியத்தன’ங்களிலேயே வித்தியாசமாக இருந்தது. அந்தளவுக்கு மோடி-டிரம்ப் நட்பு இறுக்கமாக இருந்த நிலையில்தான், இரண்டாவது முறை அதிபர் பொறுப்பேற்ற டிரம்ப், இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரியை 25% ஆக்கினார்.

“பாருங்கள்.. மோடி தரப் போகும் பதிலடியை?” என்று பா.ஜ.க.வினர் சிலாகித்த நிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயையும் ராணுவத் தளவாடங்களையும் இந்தியா அதிகளவில் வாங்குகிறது. அந்தப் பணத்தை உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யா செலவிடுகிறது என்று குற்றம்சாட்டிய டிரம்ப் மேலும் 25% வரியை இந்தியப் பொருட்கள் மீது விதித்தார். 50% வரி என்பது இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டின் தொழில்துறையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. திருப்பூர் பின்னலாடைத் தொழில், தூத்துக்குடி உள்ளிட்ட மீன் ஏற்றுமதி தொழில் வரை பாதிப்புகள் வெளிப்பட்டன.

இந்தியாவைப் போலவே அமெரிக்காவில் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவும் ரஷ்யாவும் வகுத்துள்ள வியூகங்கள் அடிப்படையில் சீனாவின் முக்கிய நகரான ஷாங்காயில் நடைபெற்ற ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோருடன் இந்திய பிரதமர் மோடியும் கலந்துகொண்டது தற்போதைய நிலையில் முக்கியமான நிகழ்வாகும். 

எல்லைத் தகராறுகளைக் கடந்து சீன அதிபருடன் இந்திய பிரதமர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளும், ரஷ்ய அதிபருடன் இந்திய பிரதமர் ஒன்றாகக் காரில் பயணித்து 45 நிமிடங்கள் பேசியிருப்பதும் உலக அரங்கில் உற்று நோக்கப்படுவதுடன், அமெரிக்க அதிபரையும் இந்தக் கூட்டணி யோசிக்க வைத்திருக்கிறது.

உலக அளவிலான ஒருங்கிணைப்புகளில் நாடுகளுக்கிடையே இருக்க வேண்டியது பரஸ்பர நம்பிக்கையுடனான செயல்பாடுகள்தான். வெறும் வணிக நோக்கம், நிதி திரட்டுதல் இவற்றை மட்டுமே முக்கியமானதாக நினைத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு மோடியும் அவருடைய கட்சியினரும் ரசிகப் பட்டாளமாக மாறியது இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கையைத் தகர்த்தது. இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவு சரிந்தது. உக்ரைன் போரை நிறுத்த  ரஷ்ய அதிபர் புதினுடன் மோடி பேசிவிட்டார் என்று பா.ஜ.க.வினரின் பில்டப்புகள் நொறுங்கின. இந்திய எல்லைப்பகுதியில் சீன ராணுவம் புதிய கிராமங்களை உருவாக்கின.

அணிசேரா நாடுகள் என்ற கொள்கையை நேரு-இந்திராகாந்தி-ராஜீவ்காந்தி போன்ற பிரதமர்கள் கடைப்பிடித்தனர். அதற்கு மாறாக, அமெரிக்கா பக்கம் அணி சேர்ந்த மோடி, தற்போதைய அனுபவங்களால் சீனா-ரஷ்யா அணி பக்கம் வந்துள்ளார். யார் பக்கம் இருந்தாலும் நம்பகத்தன்மை முக்கியம். அது இல்லாவிட்டால் கோமாளித்தனமாகிவிடும்.

உலக அரங்கில் இந்தியா ஒரு போதும் கோமாளியானதல்ல.. இதை பிரதமர் அறிந்திருப்பார். அதற்கேற்ப செயல்படுவார் என நம்புவோம்.

TAGGED:BJPDonald TrumpjinpingModiTrump
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article tamilnadu tollgate சுமை கூட்டும் சுங்கக் கட்டணம்!
Next Article senkottaiyan செங்கோட்டையனின் தேர்தல் ஸ்டண்ட்

உலகம்

Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

vijay campaign
பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
Apr 2, 2026 at 1:32 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
Apr 2, 2026 at 12:52 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?