• அரசியல்
    அரசியல்Show More
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    NASA Artemis II mission
    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
    2026-04-02
    Iran drone attack
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    2026-04-02
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    pope 001
    உலகம்
    போப் காலமானார்! அடுத்த போப் எப்படித் தேர்வு செய்யப்படுவார்?
    2025-04-22
    online-tamil-news-world-news-china-population
    உலகம்
    பிறப்பு விகிதம் உயர சீனாவின் அதிரடி பிளான்!
    2026-01-21
    Israel attack on Iran
    உலகம்
    ரஷியா- ஈரான் இடையிலான ஆயுத விநியோகப் பாதையைத் தாக்கிய இஸ்ரேல்!
    2026-03-25
    online-global-tamil-news
    உலகம்
    K-POP BTS குழுவின் பிரம்மாண்ட ComeBack 2026!
    2026-03-23
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: தலையங்கம் : ஆளுநரின் வேலை என்ன?
Share
31°C
Chennai
few clouds
32° _ 31°
65%
6 km/h
Thu
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம் : ஆளுநரின் வேலை என்ன?

Rohini R
Last updated: 2026-01-21 10:05 am
Rohini R Rohini R 48 Views
Share
rn ravi
SHARE


தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவி அவர்கள் ஹாட்ரிக் ‘சாதனை’யையும் மிஞ்சியிருக்கிறார். எதில்? ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குவதில்.

ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கப்படுவது மரபு.  சட்டப்பேரவைக்கு ஆளுநர் வந்து, உரையைப் படிப்பதால் அதற்குப் பெயர் ஆளுநர் உரை. உண்மையில் அது, அரசாங்கத்தின் உரை. அதாவது, ஆளுங்கட்சி தன்னுடைய நிர்வாகத்தில் செய்த சாதனைகள், செய்யவிருக்கும் திட்டங்கள், அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் இவைதான் ஆளுநர் உரையின் உள்ளடக்கம். அரசாங்கத்தின் தரப்பில் தயாரிக்கப்பட்டு, கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை ஆளுநர் தரப்பு ஏற்றுக்கொண்டு, சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆளுநர் படிக்கும் உரையுடன் தொடங்கும். அரசமைப்புச் சட்டத்திற்கு மாறானதாக ஏதேனும் இருந்தால், ஆளுநர் தரப்பில் அது குறித்து தெரிவிக்கப்பட்டால், உரிய திருத்தங்களை அரசாங்கத் தரப்பில் செய்து, உரையை மீண்டும் கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைப்பார்கள். அதை ஆளுநர் படிப்பார். இதுதான் நடைமுறையும் மரபுமாகும். (Online Tamil News)

ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக மத்திய பா.ஜ.க. அரசின் பரிந்துரை அடிப்படையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட பின், முதன்முதலாக 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையைப் படித்தார். அரசாங்கம் அனுப்பிய உரை அப்படியே இருந்தது. 2023ஆம் ஆண்டு உரையில் இருந்த திராவிடம் என்ற சொல்லையும், திராவிடத் தலைவர்களின் பெயர்களையும் தவிர்த்துவிட்டுப் படித்தார். சிலவற்றை அவராகவே சேர்த்துப் படித்தார்.  அரசாங்கம் கொடுத்த முழு உரைதான் அவை குறிப்பில் ஏற்றப்படும் என்றும், ஆளுநர் சேர்த்த பகுதிகள் நீக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தார்.

பொதுவாக, ஆளுநர் உரை நடைபெறும் நாளில், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வது வழக்கம். முந்தைய காலங்களில் அப்படி நடைப்பெற்றுள்ளது. ஆனால், ஆளுநர் உரையின்போது, ஆளுநரே வெளிநடப்பு செய்த ‘சாதனை’ ஆர்.என்.ரவிக்கே உரியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், அவருடைய வெளிநடப்புத் தொடர்கிறது. இந்த ஆண்டு, தொடர்ச்சியாக நான்காவது முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்திருக்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறளை சொல்லி, அதற்கான விளக்கத்தையும் சொல்லி பேரவைத் தலைவரான சபாநாயகர் அன்றைய நாளின் நிகழ்வுகளைத் தொடங்கி வைக்கும் மரபு பேரறிஞர் ஆண்ணா காலத்திலிருந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது.

அதுபோலவே, மாநிலப் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து அங்கீகாரம் பெற்றதிலிருந்து, ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடப்படுவது வழக்கம். ஆட்சியிலிருந்த கட்சிகள் மாறியபோதும், அதன் முதல்வர்கள் மாறியபோதும் இந்த மரபை மாற்றவில்லை. (Governor R.N. Ravi) ஆளுநர் ஆர்.என்.ரவி இதற்கு மாறாக, -+`தொடக்கத்தில் தேசிய கீதம், அதன்பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவேண்டும் என்றும், ஆளுநர் உரை நிறைவடைந்த பிறகு மீண்டும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் எனப் பிடிவாதம் செய்து, அதையே காரணம் காட்டி, தொடர்ச்சியாக வெளிநடப்பு செய்கிறார். நான்காண்டுகள் தொடர்ச்சியான வெளிநடப்பு, அதில் மூன்றாண்டுகள் தேசிய கீதத்தைக் காரணம் காட்டிய ‘ஹாட்ரிக்’ வெளிநடப்பு.

ஆளுநர் என்பது ஒரு நிர்வாகப் பதவி. மாநில அரசுகளை மத்திய அரசு கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட நியமனப் பதவி. சட்டமன்றம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அவை. ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள். அதனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அரசுதான் அதிகாரம் மிக்கது. ஆளுநர் தனக்குரிய வரம்பை உணர்ந்து, தன் வேலையை செய்வதே ஜனநாயக மாண்பு.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததிலிருந்து, மற்ற கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்களை மரபை மீறி செயல்படச் செய்து, ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிறது. அரசமைப்புச் சட்டத்தையே கேள்விக்குறியாக்குகிறது. தமிழ்நாடு ஆளுநர் செய்ததுபோலவே, கேரள ஆளுநரும் அந்த மாநில அரசாங்கத்தின் உரையைத் தன் வசதிக்கேற்ப படித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் நிறைவேற்றிய தீர்மானம் போலவே, கேரள முதல்வரும், அரசாங்கத்தின் முழு உரையே அவைக் குறிப்பில் ஏற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க.வைப் பொறுத்தவரை, ஆளுநர் பதவி என்பதே அவசியமற்ற-ஜனநாயக விரோதமானது என அண்ணா காலத்திலிருந்து வலியுறுத்தி வருகிறது. தி.மு.க.வின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும் (Chief Minister M.K. Stalin) அதையே வலியுறுத்தியிருப்பதுடன், இனி ஆண்டுத் தொடக்கத்தில் சட்டமன்றத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையையே மாற்றும் வகையிலான சட்டத்திருத்தம் வேண்டும் என பேரவையில் குரல் எழுப்பியுள்ளார். இந்தக் குரல் பிற மாநிலங்களிலும் வலிமையாக ஒலிக்கும்.

TAGGED:Constitutional crisis GovernorDMK stand on Governor postFederalism and democracy Indiaonline tamil newsRole of Governor in IndiaTamil Nadu Governor controversyTN Governor controversytoday newsToday tamil news
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Today Rasi Palan-Tamil Horoscope Today-Today Horoscope Tamil-Online Tamil News இன்றைய ராசிப்பலன் – 21.01.2026
Next Article AMMK joins NDA-TTV Dhinakaran announcement மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் இணைகிறது அமமுக!

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
Apr 2, 2026 at 6:44 pm
dhanabal
தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
Apr 2, 2026 at 6:33 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?