திரைையுலகில் மிகவும் பிரபலமான நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது கணவர் சோஹைல் கதூரியா ஆகியோருக்கு மும்பை பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றம் தற்போது அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெய்ப்பூரில் உள்ள பழமையான அரண்மனையில் இவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களின் திருமண நிகழ்வுகள் ஒரு ஆவணப்படமாகவும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இருப்பினும், திருமணமான சில காலத்திலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர்கள் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்தே தனித்தனியாக வசித்து வந்த நிலையில், பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவரும் மீண்டும் இணைந்து வாழ வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்து இவர்களுக்குச் சட்டப்பூர்வமாக விவாகரத்து வழங்கியது. நடிகை ஹன்சிகா தனது கணவரிடமிருந்து எந்தவிதமான ஜீவனாம்சமும் பெறப்போவதில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். நான்கு ஆண்டுகால திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஹன்சிகா தனது முழு கவனத்தையும் மீண்டும் திரைப்படப் பணிகளில் செலுத்தத் தொடங்கியுள்ளார்.(Online Tamil News)


