பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். இதற்காக பெரம்பூரில் தவெக தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த அலுவலகத்தின் முகப்பில், ‘’அன்பார்ந்த கழக நிர்வாகிகளுக்கு. அன்பு வேண்டுகோள்!
தினமும் தேர்தல் அலுவலகத்திற்கு வருகை தரும் நமது கழக நிர்வாகிகள் அலுவலகத்தை தூய்மையாக வைத்து கொள்ளுவது உங்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். அலுவலகத்தை பரிமாரிப்பது, பாதுகாப்பதும் நம் அனைவரின் பொறுப்பு.

இனி வரும் நாட்களில் இவற்றை உணர்ந்து செயல்படுங்கள். இவை தளபதி நமக்காக அமைத்து தந்த அலுவலகம், இவ்விடத்தை புனிதமான இடமாக நாம் கருதி ஒழுக்கத்தை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என்ற அறிவிப்பு உள்ளது.
‘’புனிதமான இடமாக…’’ என்று இருக்கும் வாசகம்தான் தவெகவினரையே எரிச்சல்பட வைத்திருக்கிறது. தவெகவினர் பலரையும் முகசுழிக்க வைத்திருக்கிறது இந்த அறிவிறுத்தல்.



