லீக் கான ஜனநாயகன் படத்தில் EDIT_REF 14012026 என்ற வாட்டர் மார்க் இருந்ததால் அப்படத்தின் எடிட்டர் பிரதீப் ஈ ராகவ்தான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும் என்று பலரும் பேச ஆரம்பித்தனர். பிரபல இயக்குநர் அமீரும் இதே கருத்தை பதிவு செய்திருந்தார்.
இப்படி ஒரு பகீர் குற்றச்சாட்டு பரவியதுமே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி, பிரதீப் ஈ ராகவ்வை அழைத்து 3 மணி நேரம் விசாரணை நடத்தி இருக்கிறார்.

மூன்று மணி நேர விசாரணையில் ஜனநாயகன் பட லீக் விவகாரத்தில் பிரதீப் ஈ ராவ்க்கு சம்பந்தம் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது.
இதன் பின்னர் பெப்சி அமைப்பில் உள்ள எடிட்டர்களுடன் இணைந்து இந்த விவகாரத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார் ஆர்.கே.செல்வமணி. ‘’பிலிமில் இருந்து சினிமா டிஜிட்டலுக்கு மாறியபோது நிறைய மாற்றங்கள் வந்துவிட்டது. அதனால் எடிட்டரிடம் மட்டும் படம் இருப்பதில்லை. 100 பேரிடம் படத்தின் வெர்சன் இருக்கும்.
எடிட்டரால்தான் இது லீக் ஆகி இருக்கும் என்று அமீர் சொல்லி இருக்கிறார்.

ராகவ்வுக்கு திருமணமாகி 6 வருடம் ஆகிவிட்டது. இப்போதுதான் அவரது மனைவி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். படம் லீக் ஆனதில், போலீசார் விசாரணையில் அவரும் அவரது குடும்பத்தினரும் மன உளைச்சலில் உள்ளனர். ராகவ் மனைவி நேற்றிலிருந்து அழுதுகொண்டே இருக்கிறார்.
இதையெல்லாம் பார்த்து அமீர் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும்.
எடிட்டர் தவறு செய்ய நினைத்தால் EDIT_REF என்றா வாட்டர் மார்க் போட்டு அனுப்புவார்? trump வாட்டர் மார்க் கூட போட்டு அனுப்புவார்கள். எங்க டெக்னீஷியனை காயப்படுத்தாதீர்கள். ராகவ் குடும்பம் மிகுந்த பாதிப்புல் இருக்குது. தவறான கருத்துக்களை பரப்பாதீர்கள்’’ என்றார்.



