• அரசியல்
    அரசியல்Show More
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
    vijay campaign
    விஜய் பிரச்சாரங்களில் ஆதவ் செய்யும் செட்டப் அம்பலம்!
    Apr 1, 2026 at 5:04 pm
    ajaykumar bhalla
    கோவிந்த் மோகனா? அஜய் பல்லாவா? தவெகவுக்கு வந்த குழப்பம்
    Apr 1, 2026 at 4:22 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19

    அண்மைச் செய்திகள்

    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    2026-04-02
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    2026-04-02
    Indonesia ,
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Daily Horoscope,
    இன்றைய ராசிப்பலன்- 02.04.2026
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
  • உலகம்
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    Canada school shooting,Online Tamil News
    உலகம்
    கனடாவில் பயங்கரம் – பள்ளி துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழப்பு
    2026-02-11
    Petrol price hike Pakistan ,
    உலகம்
    போர் எதிரொலி: பாகிஸ்தானில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 321 ஆக உயர்வு!
    2026-03-07
    Prince Andrew arrested, King Charles brother,Online Tamil News
    உலகம்
    எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கிய மன்னர் சார்லஸின் தம்பி ஆண்ட்ரூ கைது !
    2026-02-20
    Geographic-North-Pole-Magnetic-earth-worldnews-science-tamilworldnews-tamil-newsupadtes
    உலகம்
    பூமியின் காந்த வட துருவம் வேகமாக நகருகிறதா?புதிய ஆய்வு கூறிய அதிர்ச்சி தகவல்!
    2025-12-24
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: வேற்று கிரகத்தில் உயிரினம் உள்ளதா? – புதிய ஆதாரம்!
Share
33°C
Chennai
few clouds
34° _ 33°
55%
5 km/h
Thu
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அறிவியல் & தொழில்நுட்பம்

வேற்று கிரகத்தில் உயிரினம் உள்ளதா? – புதிய ஆதாரம்!

Last updated: 2025-04-18 6:56 am
198 Views
Share
Screenshot 2024 05 04 at 09.07.32
SHARE

பூமியைத் தாண்டி வேற்று கிரகத்தில் உயிரினம் இருப்பதற்கான புதிய சாத்திய கூறுகளை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி நிக்கு மதுசூதன் தலைமையிலான குழு கண்டறிந்துள்ளது. 

விண்வெளி தொடர்பான ஆராய்ச்சியில் மிகவும் சுவாரசியமாகப் பார்க்கப்படுவது ஏலியன் எனப்படும் வேற்று கிரகத்தில் உயிரினம் இருக்குமா? இருந்தால் அது எப்படி இருக்கும்? என்பது பற்றிய செய்திகள் தான். சிந்தனை அளவில் ஏலியன் பற்றி ஆய்வாளர்கள் பேசத் தொடங்கிய நாள் முதலே, இது தொடர்பான கற்பனை கதைகளும், திரைப்படங்களும் வெளிவரத் தொடங்கிவிட்டன. 

தற்போது ஏலியன் தொடர்பான செய்திக்கு அறிவியல் பூர்வமான புதிய ஆதாரம் கண்டறியப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள K2-18b என்ற கோள் அமைந்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் பதிவான தரவுகளைக் கொண்டு, இக்கோளில் உயிரினங்கள் இருக்கலாம் என்பதற்கான ஆதாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாகப் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி நிக்கு மதுசூதன் தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.

K2-18b கோள் பூமியைவிட இரண்டரை மடங்கு பெரிது, பூமியிலிருந்து சுமார் 700 டிரில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது. இக்கோளின் வளிமண்டலத்தில் நீராவி இருப்பதை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி கடந்த 2019ம் ஆண்டு கண்டறிந்தது. அதனைத் தொடர்ந்து, இதில் உயிரினங்கள் வாழ்வதற்கான அதிகபட்ச சாத்தியக்கூறுகள் உள்ள கிரகமாக அறிவிக்கப்பட்டது. 

ஆழமான, மிகப் பரந்த பெருங்கடல் அமைந்துள்ளதாகவும், இதனால் அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளதாகவும் கேம்பிரிட்ஜ் ஆய்வுக் குழு 2023ம் ஆண்டு தெரிவித்தது. 

2000x1333 JamesWebb C

இவ்வளவு தொலைவில் உள்ள கோளினை ஆய்வு செய்வது என்பது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலமே சாத்தியமானது. சூரியனைவிடச் சிறிதாக உள்ள சிவப்பு நட்சத்திரத்தின் வழியாக  இந்த கோள் கடந்து செல்லும் போது, அதன் மீது படும் நட்சத்திரத்தின் ஒளி மூலம் கோளின் வேதியியல் கலவையை ஆய்வு செய்ததின் முடிவின் மூலமாக இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படிச் செய்யப்பட்ட ஆய்வில், உயிர்களுடன் தொடர்புடைய இரண்டு மூலக்கூறுகளின் வேதியியல் அடையாளங்கள் அக்கோளின் வளிமண்டலத்தில் இருப்பதாக கேம்பிரிட்ஜ் ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது. Dimethyl sulfide (DMS) மற்றும் Dimethyl disulfide (DMDS) ஆகியவையே அந்த வேதியியல் மூலக்கூறுகளாகும். பூமியில் இந்த வாயுக்கள் கடலில் உள்ள ஃபைட்டோபிளாங்டன் மற்றும் பாக்டீரியாக்கள் மூலம் உற்பத்தியாகிறது.

பூமியில் உள்ள இந்த வாயுவின் அளவை விட அக்கோளின் வளிமண்டலத்தில் பல மடங்கு அதிகம் உள்ளதாகவும், உயிர்களுடனான தொடர்பு உண்மையாக இருந்தால், இக்கோளில் ஏராளமான உயிர்கள் இருக்கும் என்றும் நிக்கு மதுசூதன் தெரிவித்துள்ளார். 

வேற்று கிரகத்தில் உயிரினம் இருப்பதற்கான புதிய தரவுகள் கிடைக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த தகவல் போதுமானதாக இல்லை என விஞ்ஞானிகளில் சிலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக இன்னும் நீண்ட ஆய்வுகள் தேவை என்ற கருத்தையும் முன்வைக்கின்றனர். 

இதனை மதுசூதனும் ஏற்கிறார். இவர் தலைமையிலான ஆய்வுக் குழு மற்ற குழுக்களுடன் சேர்ந்து DMS மற்றும் DMDS வாயுக்கள் உயிரற்ற ஒன்றால் உற்பத்தியாகக் கூடுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். 

எப்படி இருப்பினும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று சிறந்தது என வலுவான ஆதாரங்களின் அடிப்படையிலேயே நிறுவப்படும். அறிவியலுக்கு முடிவு என்பது கிடையாது. அப்படிப் பார்க்கையில், வேற்று கிரக வாசிகள் குறித்த தற்போது வரையிலான ஆய்வுகளில் நிக்கு மதுசூதன் குழு கண்டறிந்தது புதிய ஆதாரமாகவே உள்ளது. ஆய்வுகள் தொடரும் நிலையில், K2-18b கோளில் உயிரினம் உள்ளதா? இல்லையா? என இன்னும் வலுவான ஆதாரங்களுடனான ஆய்வு முடிவுகள் வெளிவரும் என எதிர் பார்க்கலாம்.

TAGGED:alien
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Supreme Court vs Parliament தலையங்கம்: நாடாளுமன்றமா? உச்சநீதிமன்றமா? 
Next Article ADMK BJP Alliance Edapadi palaniswami meets Amit Shah in Delhi தலையங்கம்: கூட்டணியும்-கூட்டணி ஆட்சியும்!

உலகம்

Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

vijay campaign
பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
Apr 2, 2026 at 1:32 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
Apr 2, 2026 at 12:52 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?