• அரசியல்
    அரசியல்Show More
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Mediterranean Sea
    அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
    2026-04-02
    NASA Artemis II mission
    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
    2026-04-02
    Iran drone attack
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    Trump Iran attack halt,
    உலகம்
    ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு!
    2026-03-23
    Tokyo fish market- Tuna auction- Sushi Zanmai- Kiyoshi Kimura- Bluefin tuna- Seafood auction- Record tuna sale- Japanese fish market
    உலகம்
    இந்த மீன் விலை ரூ.28 கோடி!
    2026-01-14
    Kim Jong Un missile test
    உலகம்
    எதிரிகளுக்கு எச்சரிக்கை: ஏவுகணை சோதனையை நடத்திய கிம் ஜாங் உன்!
    2026-03-11
    Thailand Election 2026
    உலகம்
    2026 தேர்தல் – திணறும் தாய்லாந்து!
    2026-02-10
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: தலையங்கம்: ஆயிரம் (ரூபாய்) சாதனை
Share
28°C
Chennai
few clouds
28° _ 27°
78%
1 km/h
Fri
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம்: ஆயிரம் (ரூபாய்) சாதனை

Last updated: 2025-04-08 9:13 am
Spark Desk 132 Views
Share
LPG Cylinder price hiked by BJP Modi Government
SHARE

தற்போதைக்கு எந்த மாநிலத்திலும் தேர்தல் இல்லை என்பதை மக்கள் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? பெட்ரோல்-டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டிருப்பதுடன், சமையல் கேஸ் விலையையும் சிலிண்டருக்கு ஐம்பது ரூபாய் உயர்த்தியிருக்கிறதே மோடி அரசு. இதுதான் தேர்தல் இல்லாத காலம் என்பதை இந்திய மக்கள் எளிதாகப் புரிந்துகொள்வார்கள். கடந்த 11 ஆண்டுகளாக அந்தளவுக்கு மக்களைப் பழக்கியிருக்கிறார் பிரதமர் மோடி.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தற்பாதைய விலையைவிட பாதி விலையில்தான் சமையல் சிலிண்டர்களின் விலை இருந்தன. அப்போது பா.ஜ.க.வினர் தெருவில் உருண்டு புரளாத குறையாகப் போராட்டங்களை நடத்தினர். குறிப்பாக, பா.ஜ.க.வின் பெண் அடையாளங்களான ஸ்மிருதி இரானி, தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் எனப் பலரும் ரோட்டில் சிலிண்டரை வைத்தும், விறகு அடுப்பு எரித்தும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மோடி ஆட்சிக்கு வந்தததிலிருந்து முந்தைய ஆட்சியைவிட ஏறத்தாழ இருமடங்கு அளவிற்கு கேஸ் சிலிண்டர் விலை ஏறிவிட்டது.

சர்வதே சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய்யின் விலை குறைந்திருந்த காலத்திலும் பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்திக்கொண்டே வந்தது மோடி அரசு. இந்தியாவின் எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதால், விலையை நிர்ணயிக்கும் உரிமை அந்த நிறுவனங்களிடமே தரப்பட்டிருக்கிறது என விளக்கமும் அளிக்கப்பட்டது. ரூபாய் 60, 70 என்ற நிலையில் இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயைத் தாண்டி விற்கப்படுகிறது. பெட்ரோல் விலைக்கும் டீசல் விலைக்குமான இடைவெளி பெருமளவில் குறைந்துவிட்டது. இரண்டின் விலையும் தாறுமாறாக உள்ளது.

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்தால் சரக்குப் போக்குவரத்தை நடத்துபவர்கள் நெருக்கடியை எதிர்கொள்வார்கள். அவர்களின் சரக்குக் கட்டணம் உயர்த்தப்படும். அப்படி உயர்த்தப்படுகிற சரக்கு கட்டணத்தை, பொருட்களின் விலை மீது வைப்பார்கள் வணிகர்கள். மொத்த விற்பனை முதல் சில்லரை விற்பனை வரை இந்த விலையுயர்வு நீடிக்கும். இறுதியில், டூவீலரில் ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டுக்கொண்டு, டவுனுக்கு சென்றால் குறைந்த விலைக்குப் பொருட்களை வாங்கலாம் என நினைக்கும் நடுத்தர மக்கள், பெட்ரோலுக்கும் கூடுதலாக செலவழித்து, பொருட்களையும் அதிக காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை ஏற்படும். மற்ற பொருட்களின் விலை உயர்வுக்கு பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வே அடிப்படையாகும். மோடி அரசு அமைந்ததிலிருந்தே பெட்ரோல்-டீசல்-கேஸ் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்புவரை மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்தது. தங்கம் விலையை அறிந்துகொள்வதுபோல, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பை அறிந்துகொள்வது போல ஒவ்வொரு நாளும் பெட்ரோல்-டீசல் விலை என்ன என்று தெரிந்துகொண்டுதான் வெளியே போகக்கூடிய நிலையில் மக்கள் இருந்தார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பெட்ரோல்-டீசல்-கேஸ் விலை பெரியளவில் மாற்றமில்லாமல் இருந்தது. கடந்த சில மாதங்களாகவே அதே நிலை நீடித்து வந்த நிலையில், கேஸ் சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்தி, ஏறத்தாழ 1000 ரூபாய்க்கு ஒரு சிலிண்டர் என்ற நிலையைக்கு கொண்டு வந்திருக்கிறது மோடி அரசு.

பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து நட்டத்தை சந்திப்பதால் இந்த விலை உயர்வு என்று தெரிவித்திருக்கிறார் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர். சமையல் கேஸ் சிலிண்டருக்கு ஏழை -நடுத்தர மக்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த மானியம், வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று உத்தரவாதம் தந்த மோடி அரசு, எங்கே அந்த மானியம் என்று தேடக்கூடிய நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது.

கடந்த முறை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது, பெட்ரோல்-டீசல்-கேஸ் ஆகியவற்றுக்கு மானியம் அளிக்கப்படும் என தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. பெட்ரோலுக்கு மட்டும் ஓரளவு மானியம் வழங்கப்பட்டதால், மற்ற மாநிலங்களில் அப்போது நூறு ரூபாயைக் கடந்திருந்த பெட்ரோல் விலை, தமிழ்நாட்டில் மட்டும் சற்று குறைவாக இருந்தது. ஆனால் டீசல், கேஸ் ஆகியவற்றுக்கான மானியத்தை தி.மு.க. அரசு வழங்கவில்லை. குறிப்பிட்ட அளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிலையாக இருந்தால் மானியம் என்பது பயன்தரக்கூடியதாக இருக்கும். மத்திய அரசு இவற்றின் விலையைக் கூட்டிக்கொண்டே போகும் நிலையில், மாநில அரசின் மானியம் எந்த சுமையையும் குறைக்காது என்றாலும், தூக்குகின்ற சுமையால் ஏற்படும் அழுத்தத்திற்கு ஒத்தடமாக அமையும். தமிழ்நாட்டு மக்கள் அத்தகைய ஒத்தடத்தை எதிர்பார்க்கிறார்கள்.

TAGGED:cylinderDIESELdutyexcisehikeLPGPETROLprice
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article manju மஞ்சுமல் பாய்சும் எம்புரானும் ஒண்ணா?
Next Article sivakarthikeyan sings oh sona ajith song நாங்களே பாடி நாங்களே கைதட்டிக்குவோம்

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Mediterranean Sea
அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
Apr 2, 2026 at 6:59 pm
Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
Apr 2, 2026 at 6:44 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?