மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு மனுவை அவசர வழக்காக விசாரித்தார் நீதிபதி தமிழ்ச்செல்வி.
வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கவே சின்னத்தை முடக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பு வாதம் செய்தது. சிக்கலை தவிர்க்க இரு தரப்பும் பொது சின்னத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் ராமதாஸ் தரப்பு வாதம் செய்தது.
வேட்புமனு பரிசீலனை வாபஸ் பெற கால அவகாசம் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரக உள்ளது என்று வாதிட்டது தேர்தல் ஆணையம்.

சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுக வேண்டுமென்ற உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான வழக்கு என்று அன்புமணி தரப்பு வாதம் செய்தது.
இரு தரப்பின் வாதங்கள் முடிவடையாததால் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார் நீதிபதி. மாம்பழம் சின்னத்தை அன்புமணி தரப்புக்கு ஒதுக்ககூடாது என்று உத்தரவிட முடியாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.



