• அரசியல்
    அரசியல்Show More
    kak mukil
    இவருக்கே சீட் கொடுக்கலையா எடப்பாடி? அதிமுகவினர் அதிர்ச்சி
    Mar 31, 2026 at 7:24 pm
    leema
    ஒரு MLAவுக்கு ரூ.100 கோடி – அதிமுகவை கைப்பற்ற மார்ட்டின் மனைவி திட்டம்?
    Mar 31, 2026 at 12:07 pm
    விஜய் குடுமதின்ன்ன்ன்ன்
    குடும்பத்தினரை கடனாளிகளாக்கி இழிவுபடுத்திய விஜய்
    Mar 30, 2026 at 6:32 pm
    perambur vijay
    விஜய்க்கு என்ன ஆச்சு?ஆனந்த் சொல்வது உண்மையா?
    Mar 30, 2026 at 5:01 pm
    modi mamatha
    பாஜகவுக்கு ஓட்டு போட்டா மீன், கறி, முட்டை சாப்பிட முடியாதா?
    Mar 30, 2026 at 3:10 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19

    அண்மைச் செய்திகள்

    kak mukil
    இவருக்கே சீட் கொடுக்கலையா எடப்பாடி? அதிமுகவினர் அதிர்ச்சி
    2026-03-31
    tamil horoscope,
    இன்றைய ராசிப்பலன்-  31.03.2026
    2026-03-31
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    2026-03-31
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    2026-03-31
  • இந்தியா
    இந்தியாShow More
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
  • உலகம்
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    India supplies fuel to Sri Lanka
    உலகம்
    இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
    2026-03-30
    online-tamil-news
    உலகம்
    உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
    2026-03-28
    US-government -sell weapons- $11.15 billion-Taiwan-China
    உலகம்
    தைவானுக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா;  கிழக்கு ஆசியப் பகுதியில் போர் பதற்றம்?
    2025-12-19
    Reliance Industries,
    உலகம்
    அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: ரிலையன்ஸ் ₹300 பில்லியன் ஒப்பந்தம்!
    2026-03-11
    Colombia plane crash, small plane crash Colombia, Online Tamil News
    உலகம்
    கொலம்பியாவில் விமான விபத்து – 15 பேர் உயிரிழப்பு
    2026-01-29
    Thailand Election 2026
    உலகம்
    2026 தேர்தல் – திணறும் தாய்லாந்து!
    2026-02-10
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: தலையங்கம் : சாகும் உரிமை வழங்கிய சட்டம்
Share
28°C
Chennai
mist
28° _ 27°
78%
2 km/h
Wed
30 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம் : சாகும் உரிமை வழங்கிய சட்டம்

harish rana aruna aruna shanbaug
Last updated: 2026-03-13 11:07 am
Spark Desk 62 Views
Share
SHARE

இந்தியாவில் கருணைக்கொலை என்பது சட்டப்பூர்வமானதா? – இந்தக் கேள்வியை 2018 ஆம் ஆண்டிற்கு முன்னால் கேட்டால் இல்லை என்றுதான் பதில் கிடைத்திருக்கும்.

2018ஆம் ஆண்டில்தான் இந்தியாவில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானது. அதுவும் பேசிவ் யுத்தனேஷியா எனும் ’செயலற்ற கருணைக்கொலை’ மட்டும்தான் சட்டப்பூர்வமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

aruna chanbag

வலி , துன்பத்தை போக்க வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வரும் நடைமுறைதான் கருணைக்கொலை என்றாலும் இதை தன்னார்வ கருணைக்கொலை, தன்னார்வமற்ற கருணைக்கொலை, நேர்மறை கருணைக்கொலை, எதிர்மறை கருணைக்கொலை (PASSIVE EUTHANASIA) அதாவது செயலற்ற கருணைக்கொலை , தன்னிச்சையான கருணைக்கொலை என்று வகைப்படுத்துகின்றது மருத்துவத்துறை.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது மருத்துவ அறிக்கைகளிலும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவின் அறிக்கைகளிலும்PASSIVE எனும் வார்த்தை அதிகம் காண முடிந்தது.

jayalalithaa apollo

கருணைக்கொலை ஏன் சட்டப்பூர்வமாக இருக்க வேண்டும்? கருணைக்கொலை ஏன் சட்டப்பூர்வமாக இருக்கக்கூடாது? என்று நீண்டகால பொது விவாதங்கள் இருந்து வந்த நிலையில், செவிலியர் அருணா ஷான்பாக் மரணம்தான் செயலற்ற கருணைக்கொலை சட்டப்பூர்வமாக்க வழிவகுத்தது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1973ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 27ம் தேதி அன்று கே.இ.எம். தனியார் மருத்துவமனையில் செவிலியராக இருந்து வந்த அருணா ஷான்பாக், அதே மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்த நிலையில், அம்மருத்துவமனையின் துப்புரவுத் தொழிலாளி சோகன்லால் பர்தா வால்மீகியால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, நாய் சங்கிலியால் கழுத்து நெரிக்கப்பட்டதில் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் தடைபட்டதால் நினைவற்ற நிலைக்கு சென்றார்.

திருமணக்கனவுகளுடன் இருந்த 25 வயது செவிலியர் அருணா ஷான் பாக்கின் வாழ்க்கையை சிதைத்த அந்த சோகன்லால் பர்தா வால்மீகி 7 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின்னர் 1980ல் விடுதலையாகிவிட்டார். ஆனால்,
42 ஆண்டுகளுக்கும் மேலாக நினைவற்ற நிலையில் படுத்த படுக்கையாக மருத்துவமனையில் இருந்தார் அருணா ஷான்பாக்.

aruna case

அர்த்தமுள்ள வழியில் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் இருக்கும் அருணா ஷான் பாக் கண்ணியத்துடன் இறப்பதற்காகவாவது அனுமதிக்க வேண்டும் என்று 2011ம் ஆண்டில் அருணா ஷான்பாக்கிற்கு கருணைக்கொலை வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த சட்டப்போராட்டம் தோல்வி அடைந்தது. மூளைச்சாவு அடைந்தாலும் சில நேரங்களில் செவிலியர்களின் செயல்பாடுகளுக்கு அசைவின் மூலம் பதிலளிக்கிறார். அதனால் கருணைக்கொலை செய்ய முகாந்திரம் இல்லை. மூளைச்சாவடைந்து செயலற்ற நிலையில் இருப்பவரையே அதுவும், நோயாளிகளின் நெருங்கிய உறவினர்கள், பராமரிப்பாளர்களிடம் இருந்து கோரிக்கை வந்தால்தான் கருணைக்கொலைக்கு அனுமதி அளிக்கப்படும் என்று சொல்லி ஊடகவியலாளர் பிங்கி விராணியின் கோரிக்கை மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.

aruna

நினைவற்ற நிலையிலேயே செவிலியர்களின் பராமரிப்பில் இருந்து வந்த அருணா ஷான் பாக் 2015ம் ஆண்டில் மே மாதம் 18ம் தேதி அன்று நிமோனியாவால் உயிரிழந்தார். அருணா ஷான் பாக்கிற்கு அன்றைக்கு கருணைக்கொலைக்கான அனுமதி கிடைக்காவிட்டாலும் அருணா ஷான் பாக் வழக்கு நாடு முழுவதிலும் பொது விவாதத்திற்கு வித்திட்டது. அதன் மூலமாகத்தான் செயலற்ற கருணைக்கொலை சட்டப்பூர்வமானது.

பொதுநல வழக்காடு மையம் எனும் தனியார் தொண்டு நிறுவனத்தின் பொதுநல மனு மீதுதான், ஒருவரால் இனி உயிர் பிழைப்பது என்பது சாத்தியமில்லை என்று மருத்துவக்குழு அறிக்கை தந்தால் அவரை கருணைக்கொலை செய்யலாம் என தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.

aruna shanbaug

2018ல் செயலற்ற கருணைக்கொலை சட்டப்பூர்வமானாலும் பலருக்கும் இந்த சட்டத்தின்படி இறக்க நீதிமன்றங்கள் அனுமதி வழங்கவில்லை. 2026ம் ஆண்டில் இப்போதுதான் முதன்முறையாக செயலற்றை கருணைக் கொலைக்கு அனுமதி அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

13 ஆண்டுகாலம் நினைவற்ற நிலையில் இருந்த ஹரிஷ் ராணாவுக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2013ல் சண்டிகரில் பொறியியல் படித்து வந்த ஹரிஷ் ராணா, 4ஆவது மாடியின் பால்கனியில் இருந்து விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு நினைவற்ற நிலைக்கு சென்றார். 13 ஆண்டுகளாக வீட்டிலேயே செவிலியர்கள் உதவியுடன் பராமரித்து வருகின்றனர் குடும்பத்தினர்.

harish rana young

நிதிச்சுமை ஒருபக்கம், மன உளைச்சல் ஒரு பக்கம் குடும்பத்தினரை நிம்மதி இழக்கச் செய்ய, கருணைக்கொலைக்கு அனுமதி கோரி 2018 மற்றும் 2023ல் நீதிமன்றம் சென்றும் இரு முறையும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது. மூன்றாவது முறையாக வைத்த கோரிக்கை, மருத்துவ குழுவினரின் அறிக்கையின் படி ஹரிஷ் ராணாவுக்கு உயிர் வாழும் மருத்துவ சிகிச்சையை ரத்து செய்ய அனுமதி வழங்கி இருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த தீர்ப்பின் மூலம் ஹரிஷ் ராணா கண்ணியத்துடன் உயிரிழக்க முடியும்.

harisha ranaa

வாழ்வது எப்படி உரிமையோ, அதே மாதிரி கண்ணியத்துடன் இறப்பதையும் ஒரு உரிமையாக அறிவிக்க வேண்டும் என்ற சட்டப் போராட்டத்திற்குத்தான் 2018ல் செயலற்ற கருணைக்கொலையை இந்தியா சட்டப்பூர்வமாக்கியது.

தொடர்ச்சியான பொது விவாதங்களால் பெருகிய ஆதரவினால் இந்தியாவைப்போலவே பெல்ஜியம், கொலம்பியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலும் கருணைக்கொலை சட்டப் பூர்வமாக்கப் பட்டிருந்தாலும் கூட இச்சட்டத்திற்கு உலகம் முழுவதிலும் எதிர்ப்புகளும் வலுவாகத்தான் இருக்கின்றன.

TAGGED:apolloaruna shanbaugHarish Ranaharish rana aruna aruna shanbaugjayalalithaajayalalithaa apolloonline tamil newsPassive Euthanasiatamil news todaytamilnaduThe law that grants the right to die
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article March 13 2026 Horoscope , இன்றைய ராசிப்பலன் – 13.03.2026
Next Article trisha vijay விஜய் பற்றிய கேள்வி – நேரடியாக எதிர்கொண்ட த்ரிஷா

உலகம்

Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
India supplies fuel to Sri Lanka
இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
உலகம் Mar 30, 2026 at 1:53 pm
online-tamil-news
உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
உலகம் Mar 28, 2026 at 5:58 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்

அண்மைச் செய்திகள்

kak mukil
இவருக்கே சீட் கொடுக்கலையா எடப்பாடி? அதிமுகவினர் அதிர்ச்சி
Mar 31, 2026 at 7:24 pm
Jayalalithaa Hyderabad house sealed
சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
Mar 31, 2026 at 7:03 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?