திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் இன்று அத்தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலைவலம் வந்தார்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். திமுக, அதிமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்தார் விஜய்.

சமையல் எரிவாயு பிரச்சனையும் பிரச்சார பேச்சை தொடங்கினார். சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் டீக்கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் எவ்வளவு கஷ்டம் எவ்வளவு நஷ்டம்? இந்த பிரச்சனைக்கு மத்திய மாநில அரசுகள்தான் காரணம் என்றார்.
டெல்லி ஓனரின் கொல்லைப்புற கள்ளக்கூட்டணி பாதி காவிக்கூட்டணி என்று அதிமுக – பாஜக கூட்டணியை விமர்சித்தார்.
கரூர் சம்பவம் ஒரு சூழ்ச்சி என்றார். ஜனநாயகன் படம் வெளியிடப்படாமல் இருப்பது கூட்டு சூழ்ச்சி என்றார். ஜனநாயகன் படம் வந்தால் ஒரு திருப்பம் ஏற்படும் என்று சூழ்ச்சி செய்துவிட்டார்கள் என்றார்.

கடைசியில்,
நான் தன்னந்தனி ஆளு நீ ஏளனமா பாருகொஞ்சம் நவுந்தேன்னா இங்க எட்டு கோடி பேரு – என்று பாட்டு பாடி, அந்த பாடலுக்கு வரும் இசைக்கு எற்ப நடனம் ஆடி, விசில் சின்னத்திற்கு ஓட்டு போடுங்க என்று வாக்கு சேகரித்தார் விஜய்.



