வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் இன்று தவெக மக்கள் சந்திப்பு நிகழ்வு நடந்தது. இதில் பேசிய தவெக தலைவர் விஜய், ‘’ எல்லா கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்திக்க விரும்புகிறேன். ஆனால் இப்போதைய சூழலில் என்னால் முடியவில்லை. நம் ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் நான் நேரடியாகச் சென்று மக்களை சந்திப்பேன்.
பெண்கள், குழந்தைகள் பாதிகாப்பில், சட்டம் ஒழுங்கில் நம் ஆட்சி சிறப்பாக இருக்கும். போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உருவாக்கப்படும். மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பிக்களில் சரிபாதி பெண்களை நியமிப்போம்’’என்பன உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்.

இது குறித்து அதிமுக முன்னால் எம்.பி., கே.சி.பழனிசாமி, ‘’ஐ.ஏ.எஸ் & ஐ.பி.எஸ் எல்லாம் அகில இந்திய சேவை, இது மாநில அரசுக்கு மத்திய மூலம் பணியமர்த்தப்படுவது. இதை மாநில அரசால் எப்படி செய்ய முடியும்? சட்டமன்ற தேர்தலுக்கு எப்படி இதை வாக்குறுதியாக கொடுக்க முடியும்? ’’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.



