• அரசியல்
    அரசியல்Show More
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
    vijay campaign
    விஜய் பிரச்சாரங்களில் ஆதவ் செய்யும் செட்டப் அம்பலம்!
    Apr 1, 2026 at 5:04 pm
    ajaykumar bhalla
    கோவிந்த் மோகனா? அஜய் பல்லாவா? தவெகவுக்கு வந்த குழப்பம்
    Apr 1, 2026 at 4:22 pm
    modi amitsha vijay
    விஜய்யுடன் மோடி போட்ட கூட்டணி ஒப்பந்தம்!
    Apr 1, 2026 at 12:13 pm
    kak mukil
    இவருக்கே சீட் கொடுக்கலையா எடப்பாடி? அதிமுகவினர் அதிர்ச்சி
    Mar 31, 2026 at 7:24 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19

    அண்மைச் செய்திகள்

    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    2026-04-01
    Shell petrol price hike India
    போர் எதிரொலி: ஷெல் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏற்றம்!
    2026-04-01
    vijay campaign
    விஜய் பிரச்சாரங்களில் ஆதவ் செய்யும் செட்டப் அம்பலம்!
    2026-04-01
    Oracle layoffs 2026
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
  • இந்தியா
    இந்தியாShow More
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
  • உலகம்
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    India supplies fuel to Sri Lanka
    உலகம்
    இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
    2026-03-30
    Malaysia prime minister term limit,
    உலகம்
    மலேசிய அரசியலில் புதிய மாற்றம்: பிரதமருக்கு 10 ஆண்டு காலவரம்பு!
    2026-02-24
    New-reed-snake-specie-founded-sceintists-sciencenews-technology
    உலகம்
    15 வருடங்களுக்கு அறியப்பட்ட பாம்பின் இனம்!
    2026-01-14
    US attack on Iran
    உலகம்
    ஈரானை தாக்க அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதங்கள் என்னென்ன?
    2026-03-02
    Sharif Osman Hadi- death-Bangladesh-Sheikh Hasina-Violence-world news
    உலகம்
    வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்…போராட்டக்குழு தலைவர் உயிரிழப்பு !
    2025-12-19
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: தலையங்கம் : அமெரிக்காவின் அடாவடி
Share
27°C
Chennai
mist
27° _ 25°
78%
2 km/h
Thu
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம் : அமெரிக்காவின் அடாவடி

Rohini R
Last updated: 2026-01-05 4:57 am
Rohini R Rohini R 36 Views
Share
US Foreign Policy-Venezuela Oil-Trump Administration-Regime Change-Anti-Imperialism-BRICS Nations-India–US Relations-Global Power Politics
SHARE

ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்று போதனை செய்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சிந்தூர் ஆபரேஷனை நிறுத்தியது நான்தான் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார். அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கவேண்டும் என்று வெளிப்படையாகவும் கேட்டார். ஆனால், உள்ளுக்குள் இருப்பது போர்வெறியும் ஆதிக்கமும்தான் என்பதை வெனிசூலா நாட்டின் மீது அமெரிக்கா நடத்தியிருக்கும் தாக்குதலும், அதன் அதிபர் மதுரோ கைது செய்யப்பட்டு, குடும்பத்துடன் நாடு கடத்தப்பட்டிருப்பதும் காட்டுகிறது.

வெனிசூலாவிலிருந்து அமெரிக்காவுக்குள் போதை மருந்துகளை சப்ளை செய்தார் மதுரோ என்பதுதான் ட்ரம்ப் (Donald Trump) வைத்த குற்றச்சாட்டு. அதைத் தொடர்ந்துதான் இத்தனை நடவடிக்கைகளும். மதுரோவை  கைது செய்த பிறகு ட்ரம்ப் நடத்திய முதல் செய்தியாளர் சந்திப்பில், ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “எண்ணெய் வளம் தொடர்பாக வெனிசுலாவில் நமது பலமான ராணுவத்தின் இருப்பு இருக்கும். அங்கு மண்ணுக்கு அடியில் இருக்கும் பிரம்மாண்டமான செல்வத்தை நாம் வெளியே எடுக்கப் போகிறோம்… அந்த நாடு அமெரிக்காவிற்கு ஏற்படுத்திய இழப்பிற்கு ஈடாக அது அமெரிக்காவிற்கு கிடைத்தே தீர வேண்டும்.” என்று சொல்லியிருக்கிறார்.

போதை பொருள் சப்ளை என்பது ஒரு காரணம். வெனிசூலாவின் எண்ணெய் வளம்தான் தாக்குதலுக்கான காரணம். இதையேதான் ஈராக் மீது ஜார்ஜ் புஷ் காலத்து அமெரிக்கா நடத்திக் காட்டியது.

ட்ரம்ப் ஆசைப்பட்ட நோபல் பரிசு, வெனிசுலாவில் மதுரோ அரசுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்த எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவிற்கு (Maria Corina Machado) வழங்கப்பட்டது. மதுரோ இடதுசாரி ஆட்சியாளர். அவர் நீடிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. அதே நேரத்தில், அந்த இடத்திற்கு வர விரும்பும் எதிர்க்கட்சித் தலைவரையும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்கா நேரடியாவே ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது. வெனிசூலா என்பது தென்னமெரிக்க நாடுகளில் ஒன்று. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கும் இதன் மூலம் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபரின் இந்த அடாவடி போக்கையும், அமெரிக்க படைகள் நடத்தியுள்ள தாக்குதலையும் ‘பிரிக்ஸ்’ (BRICS) அமைப்பில் உள்ள நாடுகள் கண்டித்துள்ளன. ஆனால், இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தியா தரப்பில் கண்டனம் வரவில்லை. வெனிசூலான மீது நேரடித் தாக்குதல் என்றால், இந்தியா மீது வர்த்தகக் கட்டுப்பாடுகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார் ட்ரம்ப். ஆனாலும் மோடியின் பா.ஜ.க அரசு அமெரிக்காவை கண்டிக்காமல், வெனிசூலாவில் வாழும்  குடிமக்களுக்கு மட்டும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பிரதமர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். அதே மாநிலத்தைச் சேர்ந்த ஜோஹ்ரன் மம்தானிதான் தற்போது அமெரிக்காவின் நியூயார்க்கின் புதிய மேயர். அவர் மிகக் கடுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.  “இறையாண்மை கொண்ட நாட்டின் மீது ஒருதலைப்பட்சமாகத் தாக்குதல் நடத்துவது என்பது போர் பிரகடனம் ஆகும். இது அந்த நாட்டின் ஃபெடரல் சட்டத்தையும் சர்வதேச சட்டத்தையும் மீறும் செயலாகும்.” என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்காவில் உள்ள பல அமைப்பினரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். அமெரிக்க நகரங்களில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

உள்நாட்டுக் குழப்பங்கள், பொருளாதார சிக்கல்கள் இவற்றை எதிர்கொள்ள முடியாத அதிபர் ட்ரம்ப், அதனை திசை திருப்ப வெனிசூலா மீது படையெடுப்பை நடத்தியுள்ளார் என்று அமெரிக்கர்களே கண்டிக்கிறார்கள். ஆனால், இந்தியாவின் பிரதமர் மோடி ஏன் கண்டிக்கவில்லை? அவரும் ட்ரம்ப் போல்தான். இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு, மதவெறியாட்டங்கள், பெண்கள் மீதான வன்முறை, வெளிநாட்டு முதலீடுகள் குறைவு உள்ளிட்ட பலவற்றிலிருந்து திசை திருப்புவதற்காக பாகிஸ்தான் மீதான எதிர்ப்புணர்வை அதிகப்படுத்துவதும், பாகிஸ்தான் வழியாக தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து இந்திய ராணுவத்தினரையும் அப்பாவி பொதுமக்களையும் தாக்கியபிறகு, பாகிஸ்தான் மீது துல்லியத் தாக்குதல் நடத்திவிட்டோம் என காலைத் தூக்கிவிட்டுக்கொள்வதும் தொடர்ச்சியான செயல்பாடுகளாக உள்ளன.

அமெரிக்க மோடியாக ட்ரம்ப்பும், இந்திய ட்ரம்ப்பாக மோடியும் இருக்கிறார்கள். அதனால்தான், ட்ரம்ப்பின் அமெரிக்க அரசு நடத்தியுள்ள அடாவடியைக் கண்டிக்க மோடி அரசுக்குத் துணிவும் இல்லை. விருப்பமுமில்லை. ஆனால், இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளிலிருந்தும், அமெரிக்காவின் உள்ளூர் நகரங்களிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

ஒவ்வொரு நாடும் தனக்கான அரசை அந்த நாட்டு மக்கள் மூலமாகத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் அடாவடியால் அல்ல.

TAGGED:Anti-ImperialismBRICS NationsGlobal Power PoliticsIndiaRegime ChangeTrump AdministrationUS Foreign PolicyUS RelationsVenezuela Oil
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Tamilnadu-Assured-Pension-Scheme–TAPS-CPS-MKStalin-govt-employees-tnpolitics-political-news பழைய CPS Vs புதிய TAPS ஓய்வூதியத் திட்டம்..சிறப்பம்சங்கள் என்னென்ன?
Next Article Vaibhav Suryavanshi-Youngest U19 captain-India U19 cricket captain-U19 Youth ODI record கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனை!… என்ன தெரியுமா ?

உலகம்

Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
India supplies fuel to Sri Lanka
இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
உலகம் Mar 30, 2026 at 1:53 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

seeman
விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
Apr 1, 2026 at 6:40 pm
Shell petrol price hike India
போர் எதிரொலி: ஷெல் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏற்றம்!
Apr 1, 2026 at 5:59 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?