அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் மோடி, மதுராந்தகத்தில் நடந்த கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, தமிழ்நாட்டில் இரட்டை எஞ்சின் ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர் என்று தெரிவித்தார். அதாவது அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமைய மக்கள் விரும்புவதாக தெரிவித்தார். மக்கள் விரும்புவதாகச் சொன்னாலும் அது பாஜகவின் விருப்பம் என்பது எல்லோருக்கும் தெரியும்.
பிரதமருக்கு முன்பாகவே அமித்ஷா, எல்.முருகன் உள்ளிட்டோரும் இதையே சொல்லி வந்தனர். பிரதமர் மோடி சொன்ன டபுள் எஞ்சினை டப்பா எஞ்சின் என்று திமுக கடுமையாக விமர்சித்து வந்தது.

இந்த நிலையில் தவெகவின் மூன்றாமாண்டு விழாவில் பேசிய விஜய், ‘’டபுள் எஞ்சின் டப்பா எஞ்சின் என்று எதுவந்தாலும் தவெதான் டாப் எஞ்சின்’’ என்று மார் தட்டி இருக்கிறார்.
‘’மும்முனைப்போட்டி, நான்கு முனை போட்டினு சொல்றாங்க. சரி அவுங்க சொல்லிட்டு போகட்டும். மாபெரும் மக்கள் சக்தியா நம்ம அணி ஒரு பக்கம், திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் ஒரு பக்கம், அடுத்து பாஜக தலைமையில் மற்றும் பலர்’’ என்று சொன்னார்.

’திமுக தலைமையில்’ என்று சொன்ன விஜய், அதிமுக தலைமையில்.. என்று சொல்லவில்லை. பாஜக தலைமையில் மற்றும் பலர் என்று அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆரம்பத்தில் இருந்தே திமுகவுக்கும் டிவிகேவுக்கும்தான் போட்டி என்று சொல்லி அதிமுகவை மிக அலட்சியப்படுத்தி பேசி வந்த விஜய் இப்போது மற்றும் பலர் என்று அலட்சியப்படுத்தி இருப்பது எடப்பாடி வட்டாரத்தில் சூடு கிளப்பி இருக்கிறது.



