• அரசியல்
    அரசியல்Show More
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
    vijay campaign
    விஜய் பிரச்சாரங்களில் ஆதவ் செய்யும் செட்டப் அம்பலம்!
    Apr 1, 2026 at 5:04 pm
    ajaykumar bhalla
    கோவிந்த் மோகனா? அஜய் பல்லாவா? தவெகவுக்கு வந்த குழப்பம்
    Apr 1, 2026 at 4:22 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19

    அண்மைச் செய்திகள்

    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    2026-04-02
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    2026-04-02
    Indonesia ,
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Daily Horoscope,
    இன்றைய ராசிப்பலன்- 02.04.2026
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
  • உலகம்
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    Tokyo fish market- Tuna auction- Sushi Zanmai- Kiyoshi Kimura- Bluefin tuna- Seafood auction- Record tuna sale- Japanese fish market
    உலகம்
    இந்த மீன் விலை ரூ.28 கோடி!
    2026-01-14
    Elon Musk, SpaceX, satellites, orbital network, Starlink, AI, Online Tamil News
    உலகம்
    விண்வெளியில் 10 லட்சம் செயற்கைகோள்களை நிலை நிறுத்தும் எலான் மஸ்க் !
    2026-02-02
    italy-Mountain-village-first baby-Abrazo-Pagliara dei Marsi-Laura Bussi Trabucco
    உலகம்
    மலை கிராமத்தில் 30 ஆண்டுக்கு பிறகு பிறந்த குழந்தை – இத்தாலியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
    2025-12-29
    Iran high tension-US citizens leave Iran-Online Tamil News
    உலகம்
    ஈரானில் அதீத பதற்றம் : அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு !
    2026-02-06
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: தலையங்கம் : மதவெறி சுழல் பந்து
Share
33°C
Chennai
few clouds
34° _ 33°
55%
5 km/h
Thu
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம் : மதவெறி சுழல் பந்து

Last updated: 2026-02-04 10:17 am
Spark Desk 58 Views
Share
Online Tamil News
SHARE

விளையாட்டு என்பது நட்புறவின் அடையாளமாகும். போர்க்களத்தில் இரண்டு நாடுகள் பகையுடன் மோதிக் கொண்டாலும் விளையாட்டுக் களத்தில் அவை நட்புடன் மோதிக் கொள்ளும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் அமைந்திருந்தன. அதன் அடையாளமாகத்தான் நவீன ஒலிம்பிக் போட்டிகள் 20ஆம் நூற்றாண்டில் சர்வதேச அளவில் நடத்தப்படும் வழக்கம் தொடங்கியது. ஆனால், அதிலும் பகை உணர்வு வெளிப்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

உலகப் போர்கள் நடந்த காலத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நிறுத்தப்பட்டன. பாதுகாப்பு காரணம் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்ட நிலையில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் (Russia) நடந்த பனிப்போரின் காரணமாக அமெரிக்க ஆதரவு நாடுகள், சோவியத் யூனியன் ஆதரவு நாடுகள் என உலக நாடுகள் இரு பிரிவுகளாயின. இந்தியா போன்ற நாடுகள் இருபக்கமும் சேராமல், அணி சேரா நாடுகள் என்ற கூட்டமைப்பை உருவாக்கின.

1980ஆம் ஆண்டு ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன. 1984ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் சோவியத் யூனியனும் அதன் ஆதரவு நாடுகளும் பங்கேற்கவில்லை. 1988ஆம் ஆண்டு தென்கொரியா தலைநகர் சியோலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில்தான் இரு தரப்பும் ஒரு சேரப் பங்கேற்றன. இப்போது சோவியத் யூனியனுமில்லை, அமெரிக்காவுடனான பனிப்போரும் இல்லை. அதனால் ஒலிம்பிக் போட்டிகளில் இதுபோன்ற புறக்கணிப்புகள் இல்லை. ஆனால், கிரிக்கெட்டை அது பற்றிக் கொண்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டு பிரபுக்களின் பகல் நேர வெயில் காயும் விளையாட்டாகத் தொடங்கிய கிரிக்கெட், அந்த நாட்டில் பரவலாக விளையாடப்படுகிறது. பிரிட்டிஷார் எந்தெந்த நாடுகளில் ஆதிக்கம் செலுத்தினார்களோ அங்கே கிரிக்கெட்டும் இப்போது வரை ஆதிக்கம் செலுத்துகிறது. பிரிட்டிஷார் ஆட்சி செய்தவரை ஒன்றாக இருந்த இந்தியா, அவர்களின் வெளியேற்றத்தின்போது இந்தியா-பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பின்னர் பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் பிரிந்தது. இந்த மூன்று நாடுகளிலும் கிரிக்கெட் என்பது முக்கியமான விளையாட்டாக உள்ளது.

இந்தியாவும் இங்கிலாந்தும் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளை விளையாட்டு என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல், ஒரு யுத்தம் போல சித்தரிப்பதை ஊடகங்கள் வழக்கமாகக் கொண்டதால், ரசிகர்களிடமும் அதே மனநிலை உருவானது. போதாக்குறைக்கு, பா.ஜ.க.வும் அதன் துணை அமைப்புகளும் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடும் நாட்களில், இந்தியாவின் வெற்றிக்காக யாகம் செய்வது, மந்திரங்கள் ஓதுவது என வெளிப்படையாகவே பகை உணர்வை வளர்த்தனர். இதே நிலைதான் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடமும் வெளிப்பட்டது.

1999ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் யார் பக்கம் வெற்றி என்பதில் பல கட்டத் திருப்பங்கள் ஏற்பட்டு, இறுதியில் எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் பந்து வீச்சினால் வெற்றி பெற்றனர். சேப்பாக்கத்தில் திரண்டிருந்த இந்திய ரசிகர்களக்கு ஏமாற்றம்தான். ஆனாலும், வெற்றிக்களிப்பில் பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் மைதானத்தை சுற்றி வந்தபோது, அரங்கில் இருந்த ரசிகர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இதுதான் விளையாட்டு ஏற்படுத்த வேண்டிய உணர்வு.(Online Tamil News)

அதற்கு மாறாக, கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, இந்தியாவின் அகமதாபாத் நகரத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் (Narendra Modi Stadium) நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள் அவுட் ஆகி பெவிலியன் திரும்பும்போது, அவர்கள் காதுபட, ‘ஜெய்ஸ்ரீராம்’ என்று கத்துகிற அவலம் நடந்தது. பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் முஸ்லிம்கள் என்பதால் மதவெறியுடன் இப்படி கோஷம் போடும் கலாச்சாரத்தைத்தான் விளையாட்டு ரசிகர்களிடம் வளர்த்து வைத்திருக்கிறோம்.

அண்மையில் பங்களாதேஷில் நடந்த போராட்டம், ஆட்சி மாற்றம் இதன் விளைவாக இந்தியாவுக்கும் பங்களாதேஷூக்கும் சுமூக உறவு இல்லை. பங்களாதேஷூம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுதான். அங்கு சிறுபான்மை இந்துக்கள் மீது தாக்குதல் நடக்கிறது. உயிரிழப்புகள் தொடர்கின்றன. இந்த நிலையில், இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகளைப் புறக்கணிப்பதாக பங்களாதேஷ் அறிவித்தது. அதனால் கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் ஐ.சி.சி., பங்களாதேஷூக்குப் பதில் ஸ்கர்ட்லாந்தை இடம்பெறச் செய்துள்ளது. பாகிஸ்தானும் இந்தியா அணியுடன் இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் ஆட்டத்தில் பங்கேற்க முடியாது என அறிவித்துள்ளது. அந்தந்த நாட்டு ஆட்சியாளர்களின் மதவெறி எனும் சுழல் பந்து, ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் எனும் விளையாட்டை சிதைத்து வருகிறது.

TAGGED:cricketIndia Pakistan RelationsInternational CricketNationalismonline tamil newsPolitics in SportsReligious ExtremismSportsmanshipWorld Cup Cricket
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article daily horoscope, horoscope February 4 2026,Online Tamil News இன்றைய ராசிப்பலன்-04.02.2026
Next Article trump mod அமெரிக்காவுக்கு உள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதா இந்தியா?

உலகம்

Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

vijay campaign
பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
Apr 2, 2026 at 1:32 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
Apr 2, 2026 at 12:52 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?