காதலர் தினத்தை முன்னிட்டு ரீ ரிலீஸ் கொண்டாட்டம் நடைபெறுகிறது. அமீர் இயக்கிய முதல் படம் ‘மவுனம் பேசியதே’. சூர்யா – த்ரிஷா, லைலா நடித்த இப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் ரீ ரிலீஸ் ஆகிறது.

இதே போன்று கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய முதல் படம் மின்னலே. மாதவன் – ரீமாசென் நடித்த இப்படம் 25 ஆண்டுகளுக்கு பின் ரீ ரிலீஸ் ஆகிறது.

கதிர் இயக்கத்தில் 1999ல் வெளிவந்த காதலர் தினம் 26 ஆண்டுகளுக்கு பின்னர் ரீ ரிலீஸ் ஆகிறது.

டி.ராஜேந்தர் இயக்கத்தில் 1983ல் வெளிவந்த உயிருள்ளவரை உஷா படம் 43 ஆண்டுகளுக்கு பின்னர் ரீ ரிலீஸ் ஆகிறது.




