பாமக யாருக்கு? மாம்பழம் சின்னம் யாருக்கு? என்று ராமதாஸ் – அன்புமணி அணிகள் இடையே நடக்கும் மோதலில் தேர்தல் ஆணையம் அன்புமணி பக்கம் இருக்கிறது என்று ஆரம்பத்தில் இருந்தே குற்றம் சாட்டி வருகிறார் ராமதாஸ்.
அன்புமணியின் தலைவருக்கான பதவிக்காலம் முடிந்துவிட்ட போதிலும் கூட, பாமகவின் தலைவ் அர் அன்புமணிதான் என்று காலாவதியான ஆவணங்களை தாக்கல் செய்திருக்கிறது அன்புமணி தரப்பு. அதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. இதைத்தான் டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார் ராமதாஸ்.

இதில் அன்புமணிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் எந்த அளவிற்கு ஆதரவாக செயல்படுகிறது என்றால், அன்புமணி தாக்கல் செய்ய வேண்டியதற்கு பதிலாக, அதாவது அவருக்கு பதிலாக தேர்தல் ஆணையமே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறது என்கிறார் ராமதாஸ்.
தைலாபுரத்தில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்புலும், ‘’அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட எதை எதையோ பேசுகிறார்கள். டெல்லி உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதமாக 2 முறை தீர்ப்பு வந்த போதிலும் கூட, அவர்களுக்காக தேர்தல் ஆணையம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்ய வேண்டியதை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் அடிமட்ட அதிகாரிகள் இப்படி ஒருதலைபட்சமாக நடந்துகொள்கிறார்கள்’’ என்று வெடித்திருக்கிறார்.



