தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவும், இதனால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் சொல்கிறார் பிரதமர் மோடி. ஆனால், திமுகவுக்கு உள்ள செல்வாக்கை பார்த்து என்.டி.ஏ. கூட்டணிதான் அதிர்ச்சி அடைந்துள்ளது.
மக்கள் நல திட்டங்களால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழகம் முழுவதும் அலை அடிக்கிறது. இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை திமுக கூட்டணி வெல்லும் என்று நம்மூர் கருத்துக்கணிப்புகள் மட்டுமல்லாது, உலகின் மிகப்பெரிய கணிப்புச் சந்தையான பாலி மார்க்கெட்டும் தனது கணிப்பை சொல்லி இருக்கிறது.

மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்கப்போகிறார் என்பது தெரிந்ததால்தான் தவெக பக்கம் தாவ இருந்த காங்கிரஸ் கூட திமுக கூட்டணியிலேயே தொடர்கிறது. தேமுதிக உள்ளிட்ட புதுப்புது கட்சிகளும் திமுக கூட்டணிக்கு வந்திருக்கின்றன. திமுக கூட்டணியில் 28 கட்சிகள் உள்ளன. 28 கட்சிகளை கூட்டணியில் வைத்து பிரம்மாண்டம் காட்டும் திமுக, திருச்சியில் நேற்று 10 லட்சம் தொண்டர்களை திரட்டி பிரம்மாண்ட மாநில மாநாடு நடத்தி இருக்கிறது. திமுகவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த செல்வாக்கு கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறது என்.டி.ஏ.

இந்த நிலையில் திருச்சிக்கு வரும் பிரதமர் மோடி, இந்த உண்மைகளை மறைத்து, என்.டி.ஏ. தொண்டர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் தோசையை திருப்பி போட்டிருக்கிறார்.

’’நாளை, மார்ச் 11 ஆம் தேதி மாலை 6:30 மணியளவில், திருச்சிராப்பள்ளியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பேரணியில் தமிழ்நாட்டின் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் நானும் இணைவேன். மாநிலம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிகரித்து வரும் செல்வாக்கால் திமுக அதிர்ச்சியடைந்துள்ளது. திமுகவின் தவறான நிர்வாகத்தையும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் தமிழக மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அதனால்தான், அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்’’ என்கிறார் மோடி.
மு.க.ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆர்ப்பரித்து வருகிறார்கள். இது மக்களிடையே அவருக்கு இருக்கும் ஆதரவு அலையினை காட்டுகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி செல்லும் பிரச்சாரங்களுக்கு எல்லாம் மக்கள் அவ்வளவாக ஆதரவு காட்டாத போதே அந்த கூட்டணியின் செல்வாக்கு அதிகமாக சரிந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. வாய்ப்பேச்சின் மூலம் இதை சரிக்கட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறாரா பிரதமர் மோடி?



