தமிழக சட்டமன்ற தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிடும் பாஜகவை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்துடன் ‘ஜீரோ பிஜேபி இயக்கம்’ அதிரடியாக தமிழக அரசியல் களம் புகுந்திருக்கிறது. அகில இந்திய மக்கள் இயக்கம் இந்த ஜீரோ பிஜேபி இயக்கத்தை தொடங்கி இருக்கிறது.
27 ஏன் பிஜேபியை தோற்கடிக்க வேண்டும்? ஜீரோ பிஜேபி இயக்கம் ஏன்? என்பது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் விளக்கம் அளித்திருக்கிறார்.
*இது அரசியல் நீதியான போர் அல்ல, தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போர்
*தமிழக சட்டப்பேரவையில் பாஜக இல்லாத நிலை இருக்க வேண்டும்
*மதுரைக்கு மெட்ரோ மறுத்ததற்காக பிஜேபிக்கு ஜீரோ
*கோவைக்கு மெட்ரோ மறுத்ததற்காக பிஜேபிக்கு ஜீரோ
*ஓசூருக்கு ஏர்போர்ட் கொடுக்க மாட்டேன் என்று சொன்னதற்காக பிஜேபிக்கு ஜீரோ
*மதுரையில் எய்ம்ஸ் தராததற்காக பிஜேபிக்கு ஜீரோ
*சென்னை மெட்ரோவுக்கு நிதி அளிப்பதில் தாமதப்படுத்துவதால் பிஜேபிக்கு ஜீரோ
*கீழடி அறிக்கையை ஏற்க மறுப்பதால் பிஜேபிக்கு ஜீரோ
*2014க்கு பிறகு டாலர் 100ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. பெட்ரோல் 100ஐ தாண்டிவிட்டது. எல்.பி.ஜி. சிலிண்டர் 1000த்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தங்கம் 1 லட்சத்தை தாண்டிவிட்டது. அதனால் பிஜேபிக்கு ஜீரோ
*தேர்தல் நெருக்கத்தில் மேற்கு வங்காளத்திலும், தமிழகத்திலும் மட்டும் தலைமைச்செயலாளர், டிஜிபி மாற்றப்பட்டிருக்கிறார்கள். பீகார், அசாமில் இப்படி இல்லையே. தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படுகிறதா? அதனால் பிஜேபிக்கு ஜீரோ.



