• அரசியல்
    அரசியல்Show More
    ramadoss-anubumani-pmk
    யாருக்குமே மாம்பழம் வேண்டாம் … ராமதாசின் வாதம் நிராகரிப்பு
    Apr 9, 2026 at 6:33 pm
    zero bjp
    பிஜேபியின் 27 தொகுதிகளில் அதிரடியாக களம் புகும்  ‘ஜீரோ பிஜேபி இயக்கம்’ 
    Apr 9, 2026 at 3:54 pm
    vijay aadhav arjuna
    விஜய் ஒலியும் ஒளியும்! Hologram தொழில்நுட்ப உதவியுடன் ஆதவ் முயற்சி!
    Apr 8, 2026 at 6:17 pm
    Tamil Nadu Election 2026 ,
    தமிழகத்தின் பணக்கார வேட்பாளர்களில் முதலிடம்-லால்குடி லீமா ரோஸ் மார்ட்டின்!
    Apr 7, 2026 at 4:35 pm
    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பாஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    Apr 4, 2026 at 3:41 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    pennix jayaraj
    9 பேருக்கும் தூக்கு – இரட்டை மரண தண்டனை ஏன்?
    2026-04-06
    Subhashini actress suicide
    கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!
    2026-04-06
    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30

    அண்மைச் செய்திகள்

    ramadoss-anubumani-pmk
    யாருக்குமே மாம்பழம் வேண்டாம் … ராமதாசின் வாதம் நிராகரிப்பு
    2026-04-09
    zero bjp
    பிஜேபியின் 27 தொகுதிகளில் அதிரடியாக களம் புகும்  ‘ஜீரோ பிஜேபி இயக்கம்’ 
    2026-04-09
    Tamil daily horoscope April 9 2026
    இன்றைய ராசிப்பலன் -09.04.2026
    2026-04-09
    Daily Horoscope ,
    இன்றைய ராசிப்பலன்-  08.04.2026
    2026-04-09
  • இந்தியா
    இந்தியாShow More
    Manipur attack news
    மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
    Apr 7, 2026 at 6:43 pm
    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    Apr 5, 2026 at 7:26 pm
    Maharashtra accident
    மகாராஷ்டிராவில் பாதுகாப்பு சுவர் இல்லாத கிணற்றில் பாய்ந்த கார்: 9 பேர் உயிரிழப்பு!
    Apr 5, 2026 at 4:08 pm
    FCRA Amendment 2026
    சிறுபாண்மையினரை மிரட்டும் FCRA சட்டதிருத்தம்!
    Apr 5, 2026 at 11:21 am
    Bihar hooch tragedy,
    பீகாரில் கள்ளசாரயம் குடித்து 7 பேர் உயிரழப்பு- 6 பேருக்கு கண்பார்வை இழப்பு!
    Apr 4, 2026 at 6:03 pm
  • உலகம்
    Israel ceasefire Iran,
    உலகம்
    போர் நிறுத்தம் லெபனானுக்கு பொருந்தாது: இஸ்ரேல்
    2026-04-08
    Trump ceasefire 2 weeks,
    உலகம்
    டிரம்ப் அறிவித்த இரு வார போர் நிறுத்தம்- இதுதான் காரணமா?
    2026-04-08
    Pakistan fuel crisis ,
    உலகம்
    எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் ‘இரவு நேர ஊரடங்கு’ அமல்!
    2026-04-07
    King Fahd Causeway ,
    உலகம்
    ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: சவுதி-பஹ்ரைனை இணைக்கும் முக்கிய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
    2026-04-07
    Iran school airstrike
    உலகம்
    ஈரான் பள்ளி மீது தாக்குதல்: உயிரிழப்பு எண்ணிக்கை 165 ஆக உயர்வு
    2026-03-02
    Geographic-North-Pole-Magnetic-earth-worldnews-science-tamilworldnews-tamil-newsupadtes
    உலகம்
    பூமியின் காந்த வட துருவம் வேகமாக நகருகிறதா?புதிய ஆய்வு கூறிய அதிர்ச்சி தகவல்!
    2025-12-24
    online-tamil-news
    உலகம்
    உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
    2026-03-28
    Egypt, children online safety, Online tamil news
    உலகம்
    சிறுவர்கள் ஆன்லைன் பாதுகாப்பு: சமூக ஊடகங்களுக்கு எகிப்து கடும் கட்டுப்பாடுகள் !
    2026-01-27
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: தலையங்கம்: திருப்பரங்குன்றம் அயோத்தியல்ல
Share
32°C
Chennai
few clouds
33° _ 31°
76%
5 km/h
Thu
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம்: திருப்பரங்குன்றம் அயோத்தியல்ல

Spark Web Desk
Last updated: 2025-02-27 12:17 pm
Spark Web Desk Spark Web Desk 96 Views
Share
Murugan Temple Thiruparankundram BJP Politics
File Pic
SHARE

சபரிமலைக்கு மாலை அணிந்து விரதமிருந்து செல்லும் இந்து பக்தர்கள் வாபர் மசூதியையும் வணங்கிவிட்டு செல்வது வழக்கம். நவக்கிரக தலங்களை தரிசிப்பதற்காக காவிரிப் படுகை மாவட்டங்களுக்கு செல்லும் பக்தர்கள் கிறித்தவத் தலமான வேளாங்கண்ணிக்கும், முஸ்லிம்கள் தலமான நாகூர் தர்காவுக்கும் இப்போதும் செல்கிறார்கள். மதுரை சித்திரைத் திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கி தாகம் தணிக்கிறார்கள் முஸ்லிம்கள். சர்ச் வாசலில் பொங்கல் வைத்து தமிழர் திருநாளின் சமத்துவத்தை உணர்த்துகிறார்கள் கிறிஸ்தவர்கள். இதுதான் தமிழ்நாடு. இந்தத் தமிழ்நாட்டை உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போல மாற்றி, மணிப்பூர் போல பற்றி எரிய வைக்க வேண்டும் என மதவெறி அரசியல் சக்திகள் திட்டமிடுகின்றன.

மதுரை திருப்பரங்குன்றம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. அந்த மலையில் சிக்கந்தர் தர்கா என்ற முஸ்லிம்களின் தலமும் உள்ளது. அடிவாரத்திலிருந்து தர்காவுக்கு செல்ல தனிப்பாதை உள்ளது. முருக பக்தர்கள் தங்கள் வழக்கப்படி பாலாபிஷேகம் செய்து, சர்க்கரைப் பொங்கல் செய்து முருகனை வழிபடுவார்கள். முஸ்லிம்கள் தங்கள் வழக்கப்படி சிக்கந்தர் தர்காவில் நேர்த்திக்கடனாக ஆடு, கோழி ஆகியவற்றைப் பலியிட்டு, ஊண்சோறு செய்வார்கள். முஸ்லிம்கள் செய்த கறிசோற்றை இந்து பக்தர்களும், இந்துக்கள் செய்த அபிஷேகப் பாலை முஸ்லிம்களும் வாங்கிக் கொள்வார்கள். இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. இப்படி ஒரு நல்லிணக்கமான வழக்கம் தொடர்ந்தால் எப்படி மதவெறி அரசியல் செய்வது?

முருக பக்தர்களான இந்துக்களை அவமதிக்கும் வகையில் திருப்பரங்குன்றம் மலையில் அசைவம் சமைக்கிறார்கள் என்றும், இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிராக மாடுகளை வெட்டுகிறார்கள் என்றும், திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலையாக்கப் பார்க்கிறார்கள் என்றும் கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ.க.வும் அதன் நிழலில் உள்ள இந்து அமைப்புகளும் சர்ச்சைகளை உருவாக்கி வந்த நிலையில், அண்மையில் நேர்த்திக்கடனுக்காக ஆடு-கோழியை எடுத்துச் சென்ற முஸ்லிம் ஒருவரை காவல்துறை தடுத்ததும், வக்ஃபு வாரியத் தலைவரான நவாஸ்கனி எம்.பி. மலைப் பகுதியில் கறிவிருந்து பரிமாறியதும் இந்து-முஸ்லிம் இருதரப்பிலும் உள்ள அரசியல் சக்திகளால் பெரிதாக்கப்பட்டு, பிரச்சினைக்கு வழிவகுத்தது. திருப்பரங்குன்றம் மலையை மீட்கப்போவதாக இந்து அமைப்புகள் போராட்ட அறிவிப்பு வெளியிட, மாவட்ட நிர்வாகம் மதுரையில் 144 தடையுத்தரவு விதித்தது.

இதை எதிர்த்து இந்து அமைப்புகள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், திருப்பரங்குன்றத்திற்குப் பதில் பழங்காநத்தத்தில் போராட்டம் நடத்த அனுமதித்து உத்தரவிட்டது நீதிமன்றம். பத்தாயிரம் பேர் அளவில் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தடையை மீறி பக்தர்கள் என்ற பெயரில் கோயிலுக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்த இந்து அமைப்பினரும் உண்டு. எல்லாவற்றையும் பொறுமையாகக் கையாண்டு எவ்வித அசம்பாவிதமும் நேராமல் ஆர்ப்பாட்ட நாளை அமைதி நாளாக்கியது காவல்துறை. எனினும், இரு மதத்தினர் இணக்கமாக வாழும் இடத்தில் திட்டமிட்டு அரசியல் செய்யும் சக்திகளுக்கு அமைந்த வாய்ப்பும், திரண்ட கூட்டமும் திராவிட மாடல் அரசு என்று சொல்லும் தி.மு.க. அரசின் மதநல்லிணக்க கொள்கைகள் மீதான விமர்சனமாக முன் வைக்கப்படுகிறது.

காவல்துறையில் மதக்கண்ணோட்டத்துடன் செயல்படும் உயரதிகாரிகள் முதல் உள்ளூர்க் காவலர்கள் வரை பலர் இருக்கிறார்கள். உளவுத்துறையின் கணிப்புகள் பிரச்சினையின் முழுத்தன்மையை அரசின் தலைமைக்கு உணர்த்தக்கூடியதாக இல்லை. மாவட்டத்தில் கட்சிப் பொறுப்பு வகிக்கும் தி.மு.க நிர்வாகிகள் இதுபோன்ற பிரச்சினைகளில் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி விடுகிறார்கள். உள்ளூர்வாசிகளோ தங்களின் அமைதியான வாழ்க்கைக்கு மதவெறி அரசியல்வாதிகளால் ஆபத்து வருமோ, திருப்பரங்குன்றம் இன்னொரு அயோத்தியாகிவிடுமோ என்று அச்சப்படுகிறார்கள். இந்த அச்சத்தைப் போக்கி, அமைதியை நிலைநாட்ட வேண்டிய கடமை தமிழ்நாடு முதலமைச்சருக்கும் அவரது தலைமையிலான தி.மு.க. அரசுக்கும் இருக்கிறது.

மசூதிகளையும் பள்ளிவாசல்களையும் குறிவைத்து மதவாத அரசியல் நடத்தும் பா.ஜ.க. மற்றும் அதன் மதவெறி அமைப்புகளுக்கு கடிவாளம் போடும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனை நடைமுறைப்படுத்தும் வகையிலும், திருப்பரங்குன்றத்தில் இரு மதத்தினரும் காலம் காலமாக இணக்கமாக இருப்பதையும், அங்கு கடைப்பிடிக்கப்படும் மரபுகளையும் வல்லுநர் குழு அறிக்கை மூலம் உறுதிசெய்து நீதிமன்றங்களில் தாக்கல் செய்தும் மதவாத அரசியல் நுழைய முடியாதபடி தடுக்க வேண்டும். காவல்துறையிலும் அரசு நிர்வாகத்திலும் காக்கி அரைடவுசர் மனப்பான்மையுடன் செயல்படுபவர்களை இனியும் அடையாளம் கண்டு களையெடுக்காவிட்டால் ஆட்சியின் நோக்கம் முற்றிலும் சிதைந்துவிடும் அபாயம் உள்ளது.

TAGGED:maduraitemplethiruparankundram
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Vijay TVK Tamil nadu Politics அடாவடி ‘லெப்ட்’பாண்டி –  வேடிக்கை பார்க்கும் விஜய்!
Next Article Adhav Arjun Thirumavalavan VCK tamil Nadu அந்த 45 நிமிடங்கள் : நடந்தது என்ன?

உலகம்

Israel ceasefire Iran,
போர் நிறுத்தம் லெபனானுக்கு பொருந்தாது: இஸ்ரேல்
உலகம் Apr 8, 2026 at 3:51 pm
Trump ceasefire 2 weeks,
டிரம்ப் அறிவித்த இரு வார போர் நிறுத்தம்- இதுதான் காரணமா?
உலகம் Apr 8, 2026 at 11:44 am
Pakistan fuel crisis ,
எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் ‘இரவு நேர ஊரடங்கு’ அமல்!
உலகம் Apr 7, 2026 at 2:37 pm
King Fahd Causeway ,
ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: சவுதி-பஹ்ரைனை இணைக்கும் முக்கிய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
உலகம் Apr 7, 2026 at 12:36 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

ramadoss-anubumani-pmk
யாருக்குமே மாம்பழம் வேண்டாம் … ராமதாசின் வாதம் நிராகரிப்பு
Apr 9, 2026 at 6:33 pm
zero bjp
பிஜேபியின் 27 தொகுதிகளில் அதிரடியாக களம் புகும்  ‘ஜீரோ பிஜேபி இயக்கம்’ 
Apr 9, 2026 at 3:54 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?