கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் தலைவர்-173 ஆவது படத்தை டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.
இப்படம் கடந்த 2022ல் வெளிவந்த ’தி அவுட்பிட்’ எனும் ஹாலிவுட் சினிமா என்று கூறப்படுகிறது. அதற்கேற்றார் போல் தி அவுட் பிட் படத்தின் தழுவல் என்பதை உறுதிப்படுத்துகிறது தலைவர் 173 படத்தின் போஸ்டர் டிசைன். கத்தரிக்கோல், ஜீன்ஸ், ஊசி, நூல் என்று டிசைனில் இருக்கிறது.

சிகாகோவில் டெய்லர் கடை நடத்தி வருகிறார் படத்தின் ஹீரோ. 1956ல் கதை நடக்கிறது. ஓர் இரவில் நடக்கும் திரில்லர் கதை இது.
சுந்தர்.சி இயக்கத்தில் காமெடியான பேய்ப்படத்தில் நடிக்க இருந்தார் ரஜினி. தி அவுட் பிட் படமோ திரில்லம் படம். ஒருவேளை ரஜினிக்காக படத்தில் காமெடி சேர்த்திருப்பார்களோ என்னவோ?



