ஆரம்பத்தில் இருந்தே எம்.ஜி.ஆருடன் தன்னை ஒப்பிட்டு பேசி வருகிறார் விஜய். அவரின் இந்த போலி முகத்திரையை தோலுரித்துக்காட்டி இருக்கிறார் நடிகை பபிதா.
எம்.ஜி.ஆர் படங்களில் நடித்த ஜஸ்டின் மகள் பபிதா. நாயகன் படத்தில் ‘நான் சிரித்தால் தீபாவளி’க்கு ஆடியவர் பபிதா. விஜயகாந்த் நடித்த கூலிக்காரன், விஜய்யுடன் ரசிகன் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பபிதா.

திண்டுக்கல்லில் அதிமுக பிரச்சாரத்தில் இருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’எம்.ஜி.ஆருடன் தன்னை ஒப்பிட்டு பேசுகிறார் விஜய். வீட்டுக்கு வந்தவர்களுக்கு எம்.ஜி.ஆர். சாப்பாடு கொடுக்காம அனுப்பியது கிடையாது. ஆனால், தன் வீட்டுக்கு வந்த ரசிகருக்கு ஒரு டம்பளரில் தண்ணீர் கூட தராதவர் விஜய். மக்களுக்கு என்ன செய்வார்?
தன்னுடைய குடும்பத்தை அரவணைத்து வாழத்தெரியவில்லை விஜய்க்கு. தன் பிள்ளைகளுக்கு நல்லது செய்யத் தெரியவில்லை. பெற்றெடுத்த தாய் தகப்பனை நல்லவிதமாக பார்த்துக் கொள்ளத் தெரியவில்லை.

தாயாரின் படத்தை பூஜை அறையில் வைத்து வணங்கியவர் எம்.ஜி.ஆர். ஆனால், பெற்ற தகப்பன் வந்தபோது வீட்டுக்குள் விடாதீர்கள் என்று துரத்தியடித்தவர் விஜய். இது எங்களுக்கு தெரியும். எஸ்.ஏ.சி. இல்லை என்றால் விஜய் வந்திருக்கவே முடியாது.
ரசிகன் படத்தில் நடிக்க தெரியாமல் அத்தனை டேக் வாங்குவார் விஜய். டான்ஸ் ஆடத் தெரியாது. அதை எல்லாம் பொறுத்துக்கொண்டு வளர்த்து விட்டார் எஸ்.ஏ.சி. அந்த ஒரு நன்றி உணர்ச்சி கூட இல்லாமல் துரத்தி அடிச்சவர் எப்படி தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்வார்?’’என்று சொல்லி விஜய்யின் முகத்திரையை தோலுரித்துக் காட்டி இருக்கிறார்.



