போதைப்பொருள் தொடர்பான ரெய்டில் சென்னை வளசரவாக்கத்தில் நடிகைகள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது சென்னை வளசரவாக்கத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக வந்த புகாரின் பேரில் போலீசார் சோதனை நடத்தி விக்னேஷ்வரன் என்கிற இளைஞரை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையின் மூலம் நடிகை அஞ்சு கிருஷ்ணா, துணை நடிகை நிவேதா உள்ளிட்டோருக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இந்த 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 6 கிராம் பெத்தம்பேட்டமைன், 7 கிராம் ஓஜி கஞ்சா, 15 கிராம் கஞ்சா 9 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அஞ்சு கிருஷ்ணா, மலையாளத்தில் ஆகாசம் கடன் படத்தின் மூலம் நாயகி ஆனவர். தமிழில் வெள்ளிமலை , ஆரோ படங்களில் நடித்துள்ளார்.



