ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் ஆனந்த் அம்பானியின் கனவுத்திட்டம் வந்தாரா(vantara. ) இது இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் காயமடைந்த, ஆபத்தான சூழலில் உள்ள விலங்குகளை மீட்டு சிகிச்சையளித்து மறுவாழ்வு அளிக்கும் சரணாலயம்.
குஜராத்தில் 3500 ஏக்கரில் அமைந்துள்ள இந்த மையம் 2008ம் ஆண்டில் இருந்தே செயல்பட்டு வருகிறது. ஆனால் முறைப்படி இந்த மையத்தை 4.3.2025ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

200க்கும் மேற்பட்ட யானைகளும், இந்தியா முழுவதிலும் இருந்து மீட்கப்பட்ட 200 சிறுத்தைகள் தமிழ்நாட்டில் இருந்து மீட்கப்பட்ட 1000 முதலைகளும் இம்மையத்தில் உள்ளன. ஆப்பிரிக்கா, மெக்ஸிகோ, ஸ்லோவாக்கியா நாடுகளிலிருந்து மீட்கப்பட்ட விலங்குகள் இம்மையத்தில் உள்ளன.
இந்த வந்தாரா வன விலங்கு சரணாலயம் தீம்- ஐ மையமாக வைத்து 100 கைக்கடிகாரங்களை தயாரித்துள்ளது ஜேக்கப்&கோ நிறுவனம். டெமண்டாய்டு கார்னெட்டுகள், சவோரைட்டுகள், பச்சை சபையர்கள், வெள்ளை வைரங்களால் உருவாக்கப்பட்டுள்ளது இந்த கைக்கடிகாரம். இது ‘ஓபரா வந்தாரா கிரீன் கேமோ’ வாட்ச்.
இந்த கைக்கடிகாரத்தின் டயலின் மையத்தில் ஆனந்த் அம்பானியின் உருவச்சிலை உள்ளது. அதைச்சுற்றிலும் ஒரு சிங்கம், ஒரு வங்காளப்புலி உள்ளன.
ஒரு கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.13 கோடி. 100 கைக்கடிகாரங்களின் மதிப்பு ரூ.13000 கோடி.
அன்பளிப்பாக பலருக்கும் கொடுப்பதற்காக இந்த கைக்கடிகாரங்களை உறுவாக்கி இருக்கிறார் ஆனந்த் அம்பானி.



