பறவைக் காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் மற்றும் பறவைப் பண்ணை உரிமையாளர்கள் முழு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இறந்த பறவைகளை வெறும் கையால் தொடக்கூடாது என்றும், மர்மமான பறவை மரணங்கள் ஏற்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் (Bird Flu) என்பது பறவைகளை தாக்கும் ஒரு தீவிர வைரஸ் (H5N1 VIRUS ) நோயாகும். சமீப காலமாக நாட்டின் பல பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவல் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மக்கள் மற்றும் பறவைப் பண்ணை உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த நோய் பறவைகளில் இருந்து பறவைகளுக்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது. சில சந்தர்ப்பங்களில் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக அவசியமானதாகிறது. இதனைத் தடுக்கும் நோக்கில் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை விரிவான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மற்றும் சுகாதாரத்துறையின் முக்கிய அறிவுறுத்தல்கள்:
- பாதுகாப்பு நடவடிக்கைகள்: இறந்த பறவைகள், குறிப்பாக காகங்களைக் வெறும் கையால் தொடவே கூடாது. இறந்த பறவைகளை கண்டால், உள்ளூர் கால்நடைத் துறை அல்லது மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.குறிப்பாக கிராமப்புறங்களில், சாலைகளில் அல்லது
- இறந்த பறவைகளை . அவ்வாறு தொடுவதன் மூலம் வைரஸ் மனித உடலுக்குள் செல்லும் அபாயம் உள்ளது.
- பறவைகளை அகற்றுதல்: இறந்த பறவைகளை 8 முதல் 10 அடி ஆழத்தில், சுண்ணாம்பு சேர்த்துப் புதைக்க வேண்டும்.
- கோழிப் பண்ணை உரிமையாளர்கள்: பண்ணைக்குள் வெளி நபர்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும். பண்ணை உபகரணங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- உணவுப் பாதுகாப்பு: கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைத்து உண்ண வேண்டும். காய்ச்சல் பாதிப்புள்ள பகுதிகளில் இருந்து வரும் கோழி இறைச்சியைத் தவிர்க்கலாம்.
- தனிப்பட்ட சுகாதாரம்: பறவைகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் கைகளை சோப்பு போட்டு அடிக்கடி கழுவ வேண்டும்.
- கண்காணிப்பு: கேரள எல்லையோர மாவட்டங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, கோழிகள் ஏற்றி வரும் வாகனங்கள் தீவிரமாக சோதிக்கப்படுகின்றன.( Online Tamil News )
மேலும், பறவைப் பண்ணைகளில் வெவ்வேறு வயதுடைய பறவைகளை ஒரே இடத்தில் வளர்க்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது நோய் பரவலை கட்டுப்படுத்த உதவும் முக்கியமான நடவடிக்கையாகும். பண்ணைகளில் சுத்தம், கிருமி நாசினி தெளிப்பு, வெளியாரின் அனுமதி கட்டுப்பாடு போன்ற நடைமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.
பறவைக் காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதே நோய் பரவலை கட்டுப்படுத்தும் சிறந்த வழியாகும். அரசின் அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றினால், இந்த அபாயத்தை பெருமளவில் குறைக்க முடியும்.


