• அரசியல்
    அரசியல்Show More
    leema
    ஒரு MLAவுக்கு ரூ.100 கோடி – அதிமுகவை கைப்பற்ற மார்ட்டின் மனைவி திட்டம்?
    Mar 31, 2026 at 12:07 pm
    விஜய் குடுமதின்ன்ன்ன்ன்
    குடும்பத்தினரை கடனாளிகளாக்கி இழிவுபடுத்திய விஜய்
    Mar 30, 2026 at 6:32 pm
    perambur vijay
    விஜய்க்கு என்ன ஆச்சு?ஆனந்த் சொல்வது உண்மையா?
    Mar 30, 2026 at 5:01 pm
    modi mamatha
    பாஜகவுக்கு ஓட்டு போட்டா மீன், கறி, முட்டை சாப்பிட முடியாதா?
    Mar 30, 2026 at 3:10 pm
    edapddi palanisamy
    திமுக 10 – அதிமுக 1 : எடப்பாடி ஏன் இப்படிச் செய்தார்?
    Mar 30, 2026 at 12:26 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19

    அண்மைச் செய்திகள்

    leema
    ஒரு MLAவுக்கு ரூ.100 கோடி – அதிமுகவை கைப்பற்ற மார்ட்டின் மனைவி திட்டம்?
    2026-03-31
    Dubai maritime incident,
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    விஜய் குடுமதின்ன்ன்ன்ன்
    குடும்பத்தினரை கடனாளிகளாக்கி இழிவுபடுத்திய விஜய்
    2026-03-31
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
  • இந்தியா
    இந்தியாShow More
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
    ONLINE-TAMIL-NEWS
    ஒரு மாம்பழம் இவ்வளவு விலையா..? இந்தியாவில் விளையும் இந்த அரிய வகை மாம்பழம் பற்றி தெரியுமா!
    Mar 19, 2026 at 3:54 pm
    Indore Fire Accident
    சார்ஜ் செய்தபோது வெடித்த மின்சார கார் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு
    Mar 18, 2026 at 3:10 pm
  • உலகம்
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    India supplies fuel to Sri Lanka
    உலகம்
    இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
    2026-03-30
    online-tamil-news
    உலகம்
    உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
    2026-03-28
    Myanmar News-Independence Day Amnesty-Prisoners Released-Political Prisoners-Human Rights
    உலகம்
    மியான்மரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் !
    2026-01-14
    Pakistan bomb blast,Islamabad explosion,Shia gathering attack,Online Tamil News
    உலகம்
    பாகிஸ்தான் தலைநகரில் பயங்கர குண்டுவெடிப்பு – 69 பேர் உயிரிழப்பு
    2026-02-06
    tvk pondichery
    உலகம்
    விஜய்க்கு எதிராக கொந்தளித்த புதுச்சேரி மக்கள்
    2025-12-11
    Trump war pause,
    உலகம்
    10 நாட்களுக்கு போர் ஒத்திவைப்பு – ட்ரம்ப் திட்டமிட்டுள்ளது என்ன?
    2026-03-28
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
Share
31°C
Chennai
scattered clouds
31° _ 31°
71%
3 km/h
Tue
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?

Last updated: 2026-03-20 10:57 am
Spark Desk 25 Views
Share
karurr
SHARE

தமிழ்நாடு முழுவதும் பரபரப்பையும் பதற்றத்தையும் உருவாக்கியது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே வேடநத்தம் ஊரைச் சேர்ந்த மாணவி திடீரெனக் காணாமல் போன விவகாரம். உடல் சிதைந்து உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதால் பெற்றவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே நெஞ்சம் பதறியது. தமிழ்நாடு காவல்துறையின் மீது கோபம் பொங்கியது.

5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் பல துறைகள் முன்னேறியிருந்தாலும், காவல்துறையின் செயல்பாடுகள் வேகமானதாகவும் முன்கூட்டியே கணிக்கக்கூடிய வகையிலும் இல்லை என்கிற குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. காவல்துறை என்பது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் உள்ள துறை என்பதால் அதன் மீதான மக்களின் எதிர்பார்ப்பும் நியாயமானதுதான். எனினும், வழக்குகளைக் கையாள்வதில் வெளிப்புற அழுத்தங்களைத் தாண்டிய ஆழமான-அறிவியல்பூர்வமான விசாரணையில் தமிழ்நாடு காவல்துறை எப்போதுமே கவனமாக இருக்கும். இந்த முறை அது கூடுதல் கவனத்துடன் இருந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம், சென்னை அண்ணாப்பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான விவகாரம், கோவை பீளமேடு பகுதியில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பாலியல் கொடூரம் போன்றவற்றில் எதிர்க்கட்சி விமர்சனங்கள், ஊடக விசாரணகைளைக் கடந்து நீதிமன்றத்தில் வலுவான ஆதாரங்களை வைத்து உண்மையை நிலைநாட்டியதை நீதிபதிகளே பாராட்டும்படி அமைந்தது.

vengaivayal

அதே நேரத்தில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக நடந்த வன்முறை-தீவைப்பு நிகழ்வுகள், மரக்காணம்-கள்ளக்குறிச்சி சாராயச் சாவுகள், சாதி ஆணவப் படுகொலைகள், லாக்கப் மரணங்கள் போன்றவை காவல்துறையின் செயல்பாடுகள் மீதான அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியதை மறுக்க முடியாது. இவற்றை மக்கள் மன்றத்தின் முன் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. அது அவர்களின் ஜனநாயகக் கடமையுமாகும்.

பா.ஜ.க.வும் அதன் கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் தமிழ்நாடு தழுவிய அளவில் மார்ச் 17அன்று, தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஆளுக்கொரு நகரத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் போன்றவர்கள் தி.மு.க.வை விமர்சிப்பதாக நினைத்து, பெண்கள் குறித்தும், நடிகைகள் குறித்தும் பேசிய பேச்சுகள் சொந்தக் கூட்டணியில் உள்ள பெண் நிர்வாகிகளாலேயே கண்டனத்திற்குள்ளாயின. மாநில மகளிர் உரிமை ஆணையம் போன்றவையும் கண்டனத்தை வெளியிட்டன. எதிர்க்கட்சியினரின் வரம்புமீறிய பேச்சைக் கண்டித்து, ஆளுங்கட்சியின் மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடிய அளவுக்கு, தன் நெஞ்சை நோக்கி குறிவைத்த அம்பு போல ஆகிவிட்டது பா.ஜ.க-அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆர்ப்பாட்டம்.

கரூரில் கடந்த 2025 செம்டம்பர் 27ல் த.வெ.க. தலைவரும் நடிகருமான விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு, தி.மு.க. ஆட்சியாளர்கள் மீது- குறிப்பாக கரூர் எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜிதான் காரணம் எனப் பழி போட்டுவிட்டு தப்பிக்கப் பார்த்தனர் த.வெ.கவினர். அதன் தலைவர் விஜய் கரூரிலிருந்து தப்பி பனையூர் பண்ணை வீட்டுக்கு ஓடிவிட்டார்.  பிறகு, இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ விசாரணை என த.வெ.க. தரப்பில் வழக்கு போடப்பட்டு உச்சநீதிமன்றமும் அந்த விசாரணைக்கு உத்தரவிட்டது.

சி.பி.ஐ. விசாரணைக்காக மூன்று முறை டெல்லிக்கு அழைக்கப்பட்டார் விஜய். அண்மையில் மூன்றாவது முறையாக விசாரணைக்கு சென்று திரும்பியபோது, டெல்லி சி.பி.ஐ அலுவலக வளாகத்திலேயே காரில் நின்றபடி அங்கு வந்திருந்த தன்னுடைய ஆதரவாளர்களுக்கு கைக்காட்டினார். கரூர் வழக்கு விசாரணையா, தேர்தல் கூட்டணிக்கான நிர்பந்தமா என ஊடகங்களில் விவாதங்கள் நடந்து கொண்டிருந்த நிலையில், கரூர் நெரிசலின் போது, த.வெ.க. சார்பில் படப்பிடிப்பு போல பெரிய பெரிய கேமராக்களில் காட்சிகளைப் பதிவு செய்த வீடியோக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

விஜய் நடித்து சென்சார் சிக்கலால் இதுவரை வெளிவராமல் உள்ள ‘ஜனநாயகன்’ படத்தில், மக்கள் கூட்டத்தைத் தத்ரூபமாக காட்டவேண்டும் என்ற நோக்கத்திலேயே இத்தகைய கேமராக்கள் மூலம் சினிமா படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது என்பதும், மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தால்தான் சினிமா காட்சி தன்னுடைய அரசியலுக்குப் பயன்படும் என்று விஜய் தரப்பு நினைத்ததும், அதனால் விஜய்யின் கரூர் வருகை பல மணிநேரம் தாமதமாகி, நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரழந்தார்கள் என்பதும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களைக் காப்பதுதான் ஜனநாயக அரசியல். மக்களின் உயிரை எடுப்பது என்ன வகை ஜனநாயகமோ?

TAGGED:online tamil newstamil news todaytamilnadutvktvkvijayvengaivayalvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad1
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article March 20 2026 Horoscope , இன்றைய ராசிப்பலன்-  20.03.2026
Next Article ONLINE-TAMIL-NEWS Voter Awareness Guide for Tamil Nadu Elections 2026

உலகம்

Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
India supplies fuel to Sri Lanka
இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
உலகம் Mar 30, 2026 at 1:53 pm
online-tamil-news
உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
உலகம் Mar 28, 2026 at 5:58 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
Mar 31, 2026 at 12:27 pm
leema
ஒரு MLAவுக்கு ரூ.100 கோடி – அதிமுகவை கைப்பற்ற மார்ட்டின் மனைவி திட்டம்?
Mar 31, 2026 at 12:07 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?