விஜய் இதுவரையிலும் பேட்டி அளித்திருக்கிறாரா? இல்லையா? என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கிறது.
திரைத்துறையில் சில செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தி இருக்கிறார். அதிலும் அதிகம் பேச மாட்டார். பிடிக்காத கேள்விகள் வந்தால் தவிர்த்துவிடுவார். பி.ஆர்.ஓ. மூலம் அந்த கேள்விகளை தவிர்த்துவிடுவார்.
பிரபல வார இதழ்களில் வந்த விஜய் பேட்டிகள் கூட அவர் அளித்தது அல்ல, நிருபர்கள் தாங்களாகவே எழுதிக்கொண்டு வந்து காட்டி விஜயிடம் ஒப்புதல் வாங்கிச் சென்று வெளியிட்டதுதான் என்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

விஜய் கேள்வி – பதில்கள் என்று வந்ததும் கூட செய்தியாளர்களும், பி.ஆர்.ஓவும் தாங்களாகவே எழுதிக்கொண்டு விஜயிடம் காட்டி ஒப்புதல் பெற்று வெளியிட்டதாகவே சொல்கிறார்கள்.
பேட்டிக்காக தொடர்ந்து தொடர்பு கொண்டபோதிலும் போனில் சிக்காமல் இருந்து வந்த விஜய், சாலிகிராமத்தில் ஷோபா மண்டபத்தின் மேல் நடந்த கில்லி படத்தின் சக்சஸ் மீட்டின் போது அந்த பெண் செய்தியாளரிடம் சிக்கி விட்டார். தங்கள் சேனலில் லைவ் நிகழ்ச்சியில் பேச விஜயிடம் அப்போது சம்மதமும் வாங்கிவிட்டார் அந்த பெண் செய்தியாளர். அந்த குறிப்பிட்ட நாளில் நடந்த லைவ் நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் உள்ள விஜய் ரசிகர்கள் ஆவலுடன் விஜயுடன் பேச காத்திருக்க, கடைசி வரையிலும் அந்த லைவ் நிகழ்ச்சியில் பங்கேற்கவே இல்லை விஜய்.
மைக் பிடித்து தன் மனம் போன போக்கில் பேசும் விஜய், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்க தயங்குவதேனோ?



