’’செங்கோட்டையன் மீதான நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமானது. இந்த நடவடிக்கை கட்சி நலனுக்கு உகந்தது அல்ல’’ என்று பழனிசாமியை சாடி இருக்கிறார் சசிகலா.
’’கெடுவார் கேடு நினைப்பார்’’ என்று பழனிசாமியின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் டிடிவி தினகரன்.
ஓ.பன்னீர்செல்வமோ, ‘’இது சர்வாதிகாரத்தின் உச்சம்’’ என்று கடுமையாக சாடி இருக்கிறார்.

’’கழகம் இணைய வேண்டும் என்பதுதான் அதிமுகவின் ஒன்றரை கோடி மக்களின் எண்ணமாக இருக்கிறது. இதற்காக 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், அமைச்சராக இருந்தவர் ஒரு கோரிக்கை வைக்கிறார். இதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி இருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம். மக்கள் இதற்கு சரியான பாடம் புகட்டுவார்கள்’’என்கிறார் பன்னீர்செல்வம்.
அவர் மேலும், ‘’அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. பிரிந்து இருப்பதால்தான் இந்த நிலை. இது தேவைதானா? ஒன்றிணைய வேண்டும் என்று குரல் எழுந்திருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது? இதைத்தான் செங்கோட்டையன் எடுத்துச் சொன்னார்.

ஒருங்கிணைப்பு பணி தொடரும் என்று சொல்லி இருக்கிறார் செங்கோட்டையன். அவருடைய சபதம் வெற்றி அடைய வாழ்த்துக்கள். அவருடைய சபதம் வெற்றி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன். நம்பிக்கையுடன் இருக்கிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.



